சினிமா செய்திகள்

பொங்கல் பண்டிகையில் 3 படங்கள்? + "||" + 3 pictures at Pongal festival?

பொங்கல் பண்டிகையில் 3 படங்கள்?

பொங்கல் பண்டிகையில் 3 படங்கள்?
தீபாவளிக்கு விஜய்யின் பிகில், கார்த்தியின் கைதி படங்கள் வெளியாகி இரண்டுமே நல்ல வசூல் பார்த்தன.
தீபாவளிக்கு விஜய்யின் பிகில், கார்த்தியின் கைதி படங்கள் வெளியாகி இரண்டுமே நல்ல வசூல் பார்த்தன. கிறிஸ்துமஸ் பண்டிகையில் சிவகார்த்திகேயனின் சூப்பர் ஹீரோ படமான ஹீரோ திரைக்கு வருகிறது. பொங்கலுக்கு எந்தெந்த படங்கள் திரைக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

ரஜினிகாந்தின் தர்பார் படம் பொங்கலுக்கு வரும் என்று ஏற்கனவே அறிவித்து உள்ளனர். இதில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். ஜோடியாக நயன்தாரா வருகிறார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி உள்ளார். படப்பிடிப்பு முடிந்து தொழில்நுட்ப பணிகள் நடக்கின்றன.

ரஜினியின் தோற்றம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. டிரெய்லர் மற்றும் பாடல்கள் விரைவில் வெளியாக இருக்கிறது. கார்த்தியின் சுல்தான் படத்தையும் பொங்கலுக்கு திரைக்கு கொண்டு வர முயற்சி நடக்கிறது. இந்த படத்தை சிவகார்த்திகேயனின் ரெமோ படத்தை இயக்கி பிரபலமான பாக்யராஜ் கண்ணன் டைரக்டு செய்துள்ளார்.

தர்பார், சுல்தான் படங்களோடு தனுசின் பட்டாஸ் படமும் மோத இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தை துரை செந்தில்குமார் இயக்கி உள்ளார். இதில் தனுஷ் தந்தை, மகன் என்று 2 வேடங்களில் நடிப்பதாகவும் தந்தை தனுசுக்கு ஜோடியாக சினேகாவும் மகன் தனுஷ் ஜோடியாக மெஹ்ரீனும் நடிப்பதாக கூறப்படுகிறது. அதிரடி கதையம்சத்தில் தயாராகி உள்ளது. பட வேலைகள் இறுதிகட்டத்தில் உள்ளன.

ஆசிரியரின் தேர்வுகள்...