சினிமா செய்திகள்

வில்லிகளாக மாறிய சாய்பல்லவி, சமந்தா + "||" + Saiballavi and Samantha become the villains

வில்லிகளாக மாறிய சாய்பல்லவி, சமந்தா

வில்லிகளாக மாறிய சாய்பல்லவி, சமந்தா
காதல், டூயட் காட்சிகளில் நடிப்பதை தவிர்த்து தங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளை நடிகைகள் தேட ஆரம்பித்துள்ளனர்.
காதல், டூயட் காட்சிகளில் நடிப்பதை தவிர்த்து தங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளை நடிகைகள் தேட ஆரம்பித்துள்ளனர். நயன்தாரா ஏற்கனவே கலெக்டர், காது கேளாதவர், கஞ்சா கடத்துபவர், பேய் உள்ளிட்ட வேடங்களில் நடித்து திறமை காட்டினார். தமன்னா பாகுபலியில் போர் வீராங்கனையாக வந்து வாள் சண்டை போட்டார்.

அமலாபால் ஆடை படத்தில் நிர்வாணமாக நடித்தார். அனுஷ்கா, திரிஷா, ஹன்சிகா ஆகியோரும் தங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளில் நடித்துள்ளனர். தற்போது சாய்பல்லவி, சமந்தா ஆகியோர் வில்லத்தனமான கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர். சாய்பல்லவி தெலுங்கில் தயாராகும் விராட பருவம் 1992 படத்தில் பெண் நக்சலைட் வேடத்தில் வருகிறார். இதில் அவர் பல கொலைகளை செய்கிறார்.

போலீஸ் அதிகாரிக்கும், பெண் நக்சலைட்டுக்கும் மலரும் காதலை மையமாக வைத்து எடுத்துள்ளனர். இதில் அழுக்கான உடையில் மேக்கப் போடாமல் நடித்து இருக்கிறார். சமந்தா பெண் பயங்கரவாதியாக நடிக்க உள்ளார். லிங்குசாமி இயக்கிய அஞ்சான் படத்தில் வில்லனாக நடித்துள்ள மனோஜ் பாஜ்பாய் நடித்த த பேமிலி மேன் என்ற வெப் தொடர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

அடுத்து தயாராகும் இதன் இரண்டாம் பாகத்தில் மனோஜ் பாஜ்பாயுடன் சமந்தா நடிக்கிறார். இதில் பெண் பயங்கரவாதியாக அவர் நடிப்பதாக கூறப்படுகிறது. பிரியாமணி, சந்திப் கிஷன் ஆகியோரும் இதில் நடிக்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ஓய்வே எடுத்துக்கொள்ளாத சமந்தா!
நடிகை சமந்தா ஓய்வே எடுக்காமல் பிஸியாகவே இருக்கிறார்.