ஜோதிகா திருமணத்துக்கு பிறகு 36 வயதினிலே, காற்றின் மொழி, நாச்சியார், ராட்சசி, ஜாக்பாட் என்று வித்தியாசமான கதை மற்றும் கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்துள்ளார்.
ஜோதிகா திருமணத்துக்கு பிறகு 36 வயதினிலே, காற்றின் மொழி, நாச்சியார், ராட்சசி, ஜாக்பாட் என்று வித்தியாசமான கதை மற்றும் கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்துள்ளார். மணிரத்னம் இயக்கிய செக்க சிவந்த வானம் படத்திலும் அவரது கதாபாத்திரம் பேசப்பட்டது.
தற்போது கார்த்தியுடன் இணைந்து புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை கமலின் பாபநாசம் படத்தை எடுத்து பிரபலமான ஜீத்து ஜோசப் இயக்குகிறார். திகில் படமாக தயாராவதாக கூறப்படுகிறது. படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. அண்ணியுடன் முதல் முறையாக சேர்ந்து நடிப்பது திரில்லிங்காக உள்ளது என்று கார்த்தி தெரிவித்துள்ளார்.
அடுத்து பொன்மகள் வந்தாள் என்ற படமும் கைவசம் உள்ளது. இதில் பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர். ஜே.ஜே.பிரட்ரிக் இயக்குகிறார். இந்த படத்துக்கு பிறகு கத்துகுட்டி படத்தை எடுத்து பிரபலமான இரா.சரவணன் இயக்கும் படத்தில் ஜோதிகா நடிப்பது உறுதியாகி உள்ளது.
இந்த படத்தில் சசிகுமாரும் நடிக்கிறார். சசிகுமார் அண்ணனாகவும், ஜோதிகா தங்கையாகவும் நடிப்பதாக கூறப்படுகிறது. சமுத்திரக்கனி, சூரி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள். இதர நடிகர்-நடிகைகள் தேர்வு நடக்கிறது. இந்த மாதம் இறுதியில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.
ஜோதிகா வித்தியாசமான கதை மற்றும் கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார். திருமணத்துக்கு பிறகு அவரது நடிப்பில் 36 வயதினிலே, காற்றின் மொழி, நாச்சியார், ராட்சசி, ஜாக்பாட், செக்க சிவந்த வானம் ஆகிய படங்கள் வந்தன.