சினிமா செய்திகள்

7-ந் தேதி பாடல்கள் வெளியீடுதர்பார் பட விழாவில் ரஜினியுடன் கமல்? + "||" + 7th Songs Release Rajinikanth at the Durbar Film Festival

7-ந் தேதி பாடல்கள் வெளியீடுதர்பார் பட விழாவில் ரஜினியுடன் கமல்?

7-ந் தேதி பாடல்கள் வெளியீடுதர்பார் பட விழாவில் ரஜினியுடன் கமல்?
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் படப்பிடிப்பு முடிந்து டப்பிங், ரீ ரிக்கார்டிங், கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடக்கின்றன.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் படப்பிடிப்பு முடிந்து டப்பிங், ரீ ரிக்கார்டிங், கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடக்கின்றன. இந்த படத்தில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக வருகிறார். தாதாக்களுக்கும், போலீசுக்கும் நடக்கும் மோதலை மையமாக வைத்து படம் தயாராகி உள்ளதாக கூறப்படுகிறது.

தர்பார் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய 4 மொழிகளில் வெளியாகிறது. ரஜினியின் முதல் தோற்றத்தை சமீபத்தில் தமிழில் கமல்ஹாசனும், இந்தியில் சல்மான்கானும், தெலுங்கில் மகேஷ்பாபுவும், மலையாளத்தில் மோகன்லாலும் வெளியிட்டனர். போஸ்டரில் போலீஸ் உடையில் ரஜினிகாந்த் கம்பீரமாக இருந்தார்.

இதில் கதாநாயகியாக நயன்தாரா வருகிறார். சுனில் ஷெட்டி, நிவேதா தாமஸ், யோகிபாபு, பிரதீக் பாபர் ஆகியோரும் உள்ளனர். இந்த படம் பொங்கலுக்கு திரைக்கு வருகிறது. படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லரை அடுத்த மாதம் 7-ந் தேதி நேரு உள் விளையாட்டு அரங்கில் வெளியிட திட்டமிட்டு உள்ளனர்.

இந்த விழாவில் நடிகர் கமல்ஹாசன் கலந்து கொள்ள அழைப்பு விடுத்துள்ளதாகவும், அவர் கலந்து கொள்வார் என்றும் கூறப்படுகிறது. சமீபத்தில் கமல்ஹாசன் நடத்திய விழாவில் ரஜினிகாந்த் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தர்பார் பாடல் வெளியீட்டு விழாவில் அடுத்த படம் மற்றும் அரசியல் சம்பந்தமான முக்கிய அறிவிப்புகளை ரஜினிகாந்த் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.