சினிமா செய்திகள்

அஜ்மீர் தர்காவில் காஜல் அகர்வால் + "||" + Kajal Agarwal at Ajmer Dargah

அஜ்மீர் தர்காவில் காஜல் அகர்வால்

அஜ்மீர் தர்காவில் காஜல் அகர்வால்
நடிகைகள் பலர் ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள புகழ் பெற்ற அஜ்மீர் தர்காவுக்கு சென்று வழிபட்டு வருகிறார்கள்.
டிகைகள் பலர் ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள புகழ் பெற்ற அஜ்மீர் தர்காவுக்கு சென்று வழிபட்டு வருகிறார்கள். நடிகை நயன்தாராவும் இந்த தர்காவுக்கு சென்று இஸ்லாமிய முறைப்படி வழிபாடு நடத்தி விட்டு திரும்பினார். தற்போது நடிகை காஜல் அகர்வாலும் அஜ்மீர் தர்காவுக்கு சென்றுள்ளார்.

அங்கு சிறப்பு தொழுகையும் நடத்தினார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் பரவி வருகின்றன. காஜல் அகர்வால் நடிப்பில் கடந்த ஆகஸ்டு மாதம் கோமாளி படம் திரைக்கு வந்தது. தெலுங்கில் கங்கனா ரணாவத் நடிப்பில் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்திய குயின் படத்தின் தமிழ் ரீமேக்காக தயாராகி உள்ள பாரிஸ் பாரிஸ் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்த படத்தில் சர்ச்சை காட்சிகள் இருப்பதாக தணிக்கை குழு ஆட்சேபம் தெரிவித்தது. இதனால் மேல் முறையீட்டு குழுவுக்கு அனுப்பினர். கால் சென்டர் என்ற ஹாலிவுட் படத்திலும் நடிக்கிறார். கமல்ஹாசனுடன் இந்தியன்-2 படத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்த படத்துக்காக விசேஷமாக வர்ம கலைகள் கற்று இருக்கிறார். இந்தியன் தாத்தா கதாபாத்திரத்தில் வரும் வயதான கமலுக்கு உதவி செய்யும் கதாபாத்திரத்தில் காஜல் அகர்வால் நடிப்பதாக கூறப்படுகிறது.

காஜல் அகர்வாலுக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாகவும், இதற்காக பெற்றோர் மாப்பிள்ளை பார்த்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.