குடிபோதையில் சித்ரவதை “எனது கணவர் விஷக்கிருமி” -நடிகை ஸ்வேதா திவாரி பாய்ச்சல்
பிரபல இந்தி நடிகை ஸ்வேதா திவாரி. நாகினி உள்ளிட்ட தொலைக் காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.
பிரபல இந்தி நடிகை ஸ்வேதா திவாரி. நாகினி உள்ளிட்ட தொலைக் காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றும் பிரபலமானார். இவர் நடிகர் ராஜா சவுத்ரியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பாலக் என்ற பெண் குழந்தை உள்ளது. பின்னர் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து பிரிந்தனர்.
அதன்பிறகு நடிகர் அபினவ் கோலியை காதலித்து 2-வது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண்குழந்தை உள்ளது. தற்போது 2-வது கணவருடனும் மோதல் ஏற்பட்டுள்ளது. அபினவ் கோலி மது போதையில் தினமும் தன்னை அடித்து சித்ரவதை செய்வதாக ஸ்வேதா திவாரி போலீசில் புகார் அளித்தார். போலீசார் அபினவ்வை கைது செய்தனர்.
தற்போது அபினவ்வை பிரிந்து தனியாக வசிக்கிறார். தொலைக்காட்சி தொடர்களிலும் நடிக்கிறார். குடும்ப வாழ்க்கை குறித்து ஸ்வேதா திவாரி அளித்துள்ள பேட்டி வருமாறு:-
“கணவரை பிரிந்த பிறகு மகிழ்ச்சியாக இருக்கிறேன். எனது வாழ்க்கை ஒரு விஷக்கிருமியிடம் சிக்கி இருந்தது. அந்த கிருமி என்னை கொடுமைப்படுத்தி சித்ரவதை செய்தது. இப்போது கிருமியை அறுவை சிகிச்சை மூலம் வெட்டி எறிந்து விட்டேன். பல பெண்கள் தங்கள் பிரச்சினையை வெளியே சொல்ல பயப்படுகிறார்கள். தொல்லைகளை பொறுத்துக்கொள்கிறார்கள். எனக்கு தைரியம் உள்ளது.”
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story