சினிமா செய்திகள்

அதிதி ராவின் திருமண கனவு + "||" + Aditi Ra's wedding dream

அதிதி ராவின் திருமண கனவு

அதிதி ராவின் திருமண கனவு
தமிழில் காற்று வெளியிடை படத்தில் கார்த்தி ஜோடியாக நடித்தவர் அதிதி ராவ். செக்க சிவந்த வானம் படத்திலும் வந்தார்.
மிழில் காற்று வெளியிடை படத்தில் கார்த்தி ஜோடியாக நடித்தவர் அதிதி ராவ். செக்க சிவந்த வானம் படத்திலும் வந்தார். தற்போது மிஷ்கின் இயக்கும் சைக்கோ படத்தில் உதயநிதியுடன் நடித்து வருகிறார். துக்ளக் தர்பார் படமும் கைவசம் உள்ளது. தெலுங்கு, இந்தியிலும் முன்னணி நடிகையாக இருக்கிறார். அதிதிராவுக்கு ஏற்கனவே திருமணம் நடந்து கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து பிரிந்தார். தனது திருமணம் எப்படி நடக்க வேண்டும் என்று அதிதிராவ் கூறியதாவது:-

“திருமண விஷயத்தில் பெண்களுக்கு, இறக்கை இருக்கிற குதிரையில் ராஜகுமாரன் வர வேண்டும். ராஜகுமாரி போல் இருக்கும் தன்னை ஒரே கையால் தூக்கி குதிரையில் உட்கார வைத்து அழைத்து செல்ல வேண்டும் என்றெல்லாம் ஆசைகள் இருக்கும் என்று அந்த காலத்து ராஜா ராணி கதைகளில் சொல்வது உண்டு.

எனக்கும் சிறுவயதில் இதுபோன்று ராஜகுமாரன் வந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. எனது அம்மா திருமணம் நடந்தபோது மேக்கப் இல்லாமல் எளிமையாக இருந்தார். நானும் அப்படியே இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். எனது திருமணம் ராஜாக்கள் காலத்து மிகப்பெரிய கோட்டையில் நடக்க வேண்டும்.

அந்த கோட்டை ’பீச்’ ஓரத்தில் இருக்க வேண்டும். திருமணம் முடிந்ததும் பீச்சில் ஓடவேண்டும், நடனம் ஆடவேண்டும் என்ற ஆசையும் இருக்கிறது.

இவ்வாறு அதிதிராவ் கூறினார்.