சினிமா செய்திகள்

அஜித்தின் ‘வலிமை’ படத்தில் வடிவேல்? + "||" + Ajith's strengths in the movie Vadivel?

அஜித்தின் ‘வலிமை’ படத்தில் வடிவேல்?

அஜித்தின் ‘வலிமை’ படத்தில் வடிவேல்?
தமிழ் பட உலகில் நகைச்சுவை நடிகராக கொடி கட்டி பறந்த வடிவேலுக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசிகர்களாக உள்ளனர்.
மிழ் பட உலகில் நகைச்சுவை நடிகராக கொடி கட்டி பறந்த வடிவேலுக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசிகர்களாக உள்ளனர். கடைசியாக அவர் நடிப்பில் மெர்சல் படம் வந்தது. அதன்பிறகு 2 வருடங்களாக படங்களில் நடிக்கவில்லை. இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் நடிக்க மறுப்பதாக படத்தின் தயாரிப்பாளர் ஷங்கர் அளித்த புகாரின் பேரில் வடிவேலுவை ஒப்பந்தம் செய்ய பட அதிபர் சங்கம் தடைவிதித்தது.

இந்த நிலையில் வடிவேல் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் புதிய படங்களில் விரைவில் நடிப்பேன் என்றார். கமல்ஹாசன் இந்தியன்-2 படத்தை முடித்து விட்டு அடுத்து நடிக்க உள்ள ‘தலைவன் இருக்கின்றான்’ படத்தில் வடிவேலை ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியானது.

தற்போது அஜித்குமாரின் ‘வலிமை’ படத்தில் நடிக்கவும் வடிவேலுவிடம் பேச்சு நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது முதல் கட்ட பேச்சுவார்த்தைதான் என்றும் வடிவேலு நடிப்பாரா இல்லையா என்பது இறுதியில்தான் தெரியவரும் என்றும் படக்குழுவினர் தரப்பில் தெரிவித்தனர்.

அஜித்தும் வடிவேலுவும் மைனர் மாப்பிள்ளை, ஆசை, ராசி, தொடரும் ஆகிய படங்களில் நடித்துள்ளனர். கடைசியாக இருவரது நடிப்பில் ராஜா படம் 2002-ல் வெளியானது. 17 வருடங்களுக்கு பிறகு மீண்டும் புதிய படத்தில் அஜித்துடன் வடிவேல் இணைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.