விபத்தில் சிக்கிய நடிகர் ராஜசேகர் காரில் மதுபாட்டில்கள்
மிழில் ‘இதுதாண்டா போலீஸ்’ படத்தில் நடித்து பிரபலமானவர் ராஜசேகர். தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கிறார்.
தமிழில் ‘இதுதாண்டா போலீஸ்’ படத்தில் நடித்து பிரபலமானவர் ராஜசேகர். தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கிறார். இவரது மனைவி ஜீவிதாவும் பிரபல நடிகை ஆவார். ராஜசேகர் ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் திரைப்பட நகரில் இருந்து அதிகாலையில் காரில் வீட்டுக்கு புறப்பட்டு சென்றார்.
ஷம்சாபாத் பகுதியில் சென்றபோது கார் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அக்கம்பக்கத்தினர் காருக்குள் சிக்கிய ராஜசேகரை வெளியே தூக்கினர். விபத்து குறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வருவதற்கு முன்னால் ராஜசேகரை வேறொரு காரில் வீட்டுக்கு அனுப்பி விட்டனர்.
விபத்தில் சிக்கிய காரை போலீசார் சோதனை செய்தனர். அதில் இரண்டு வெளிநாட்டு வோட்கா பாட்டில்களும் ஒரு டம்ளரும் இருந்ததாக கூறப்படுகிறது. வேகமாக காரை ஓட்டி வந்ததால் விபத்து ஏற்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து ஷம்சாபாத் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆர்.வெங்கடேஷ் கூறும்போது, “அதிவேகமாக காரை ஓட்டி வந்ததால் கட்டுபாட்டை இழந்து விபத்து ஏற்பட்டு உள்ளது. காரின் ஏர்பேக் ராஜசேகர் உயிரை காப்பாற்றி உள்ளது. நாங்கள் வருவதற்கு முன்பே அவர் புறப்பட்டு சென்று விட்டதால் மதுபோதையில் இருந்தாரா? என்பதை ஆய்வு செய்யமுடியவில்லை. காருக்குள் ஒயின்பாட்டில் இருந்தது” என்றார்.
ஜீவிதா கூறும்போது விபத்தில் ராஜசேகருக்கு காயம் ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உள்ளார். தற்போது நலமாக இருக்கிறார்” என்றார்.
Related Tags :
Next Story