சினிமா செய்திகள்

‘மாமங்கத்தில்’ வித்தியாசமான தோற்றத்தில் நடிகர் மம்மூட்டி + "||" + Mammootty’s look in ‘Maamangam’ for Vanitha cover has fans stunned

‘மாமங்கத்தில்’ வித்தியாசமான தோற்றத்தில் நடிகர் மம்மூட்டி

‘மாமங்கத்தில்’ வித்தியாசமான தோற்றத்தில் நடிகர் மம்மூட்டி
‘மாமங்கத்தில்’ நடித்துள்ள மம்மூட்டியின் தோற்றம் ரசிகர்களை திகைக்க வைத்துள்ளது.
திருவனந்தபுரம்,

நடிகர் மம்மூட்டி நடிப்பில் வெளியாகும்  'மாமங்கம்' நவம்பர் 21 ஆம் தேதி  வெளியிடப்படும் என தகவல் வெளியாகி  இருந்தது. ஆனால் விஎஃப்எக்ஸ் பணிகள் தாமதமானதால்  வெளியீடு டிசம்பர் 12க்கு ஒத்திவைக்கப்பட்டது. இப்படம் தற்போது போஸ்ட் புரொடக்‌ஷனின் கடைசி கட்டத்தில் உள்ளது.

'மாமங்கம்' படம் ரசிகர்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் மம்மூட்டி இதுவரை ஏற்றிராத பாத்திரத்தில் நடித்து இருப்பதாக கூறப்படுகிறது.  இந்த படத்தின் புகைப்படம் பிரபல மலையாள பத்திரிகையான வனிதாவில் சமீபத்தில் வெளிவந்து உள்ளது. இது எதிர்பார்ப்புகளை அதிகரித்து உள்ளது.

மலையாளத்தைத் தவிர இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கிலும் 'மாமங்கம்' வெளியிடப்படுகிறது. அண்மையில்,  இதில் நடித்துள்ள  உன்னி முகுந்தன், இந்தி பதிப்பில் தனது பகுதிகளுக்கு உரிய டப்பிங்கை சொந்த குரலில் பேசி முடித்து உள்ளார்.

படத்தில் மம்மூட்டி மற்றும் உன்னி முகுந்தன் தவிர கனிகா, அனு சித்தாரா, தருண் ராஜ் அரோரா, பிராச்சி தெஹ்லான், சுதேவ் நாயர், சுரேஷ் கிருஷ்ணா, மணிகுட்டன் மற்றும் சித்திக் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

படத்தை அறிமுக இயக்குனர் சஜீவ் பிள்ளை இயக்கி உள்ளார்.

'மாமங்கம்' என்பது சாவெருகல் எனப்படும் போர் வீரர்களின் வாழ்க்கை குறித்த  வரலாற்றுப் படம். 17 ஆம் நூற்றாண்டில் கொண்டாடப்பட்ட மாமாங்கம் திருவிழாவை அடிப்படையாகக் கொண்டது இப்படம். இந்த திருவிழாவில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வீரர்கள் பரதபுழாவின் கரையில் வந்து தங்கள் மேன்மையை நிரூபிக்க ஒருவருக்கொருவர் போட்டியிடுவார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. தற்கொலை செய்து கொண்ட பிரபல இளம் நடிகர் - சோகத்தில் திரையுலகினர்
டிவி நடிகர் சுஷீல் கவுடா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2. ராம்கோபால்வர்மாவின் அடுத்த திரைப்படம் 'திரில்லர்'; நாயகி அப்சரா ராணி புகைப்படங்கள்
ராம்கோபால் வர்மாவின் அடுத்த கிளு கிளுப்பு திரைப்படம் ’திரில்லர்’ எனவும் படத்தின் நடிகை அப்சரா ராணி எனவும் அறிமுகம் செய்துள்ளார்.
3. இளைய தலைமுறை நடிகர்கள் விஜய், சிவகார்த்திகேயன் எப்படி...? நடிகர் நெப்போலியன்
இளைய தலைமுறை நடிகர்கள் விஜய், சிவகார்த்திகேயன் எப்படி...? என நடிகர் நெப்போலியன பேட்டி அளித்து உள்ளார்.
4. மரணம் எங்களைப் பிரிக்கும் வரை நினைத்து மகிழ்வேன்- திருமணம் குறித்து வனிதா விஜயகுமார்
மரணம் எங்களைப் பிரிக்கும் வரை நினைத்து மகிழ்வேன் என திருமணம் குறித்து வனிதா விஜயகுமார் கூறி உள்ளார்.
5. விமானத்தில் தன்னை அதிர்ச்சியடைய வைத்த சம்பவம்- நடிகை ராதிகா ஆப்தே
விமானத்தில் தன்னை அதிர்ச்சியடைய வைத்த சம்பவம் குறித்து நடிகை ராதிகா ஆப்தே கூறி உள்ளார்.