சினிமா செய்திகள்

மேக்கப்பை விரும்பாத ராஷ்மிகா + "||" + Rashmika who does not like makeup

மேக்கப்பை விரும்பாத ராஷ்மிகா

மேக்கப்பை விரும்பாத ராஷ்மிகா
தமிழ், தெலுங்கில் வெளியான டியர் காம்ரேட் படத்தில் நடித்து பிரபலமான ராஷ்மிகா தற்போது சுல்தான் படத்தில் கார்த்தியுடன் நடிக்கிறார்.
மிழ், தெலுங்கில் வெளியான டியர் காம்ரேட் படத்தில் நடித்து பிரபலமான ராஷ்மிகா தற்போது சுல்தான் படத்தில் கார்த்தியுடன் நடிக்கிறார். தெலுங்கில் நிதின், அல்லு அர்ஜுன் ஆகியோர் ஜோடியாகவும் நடிக்கிறார். அவர் அளித்த பேட்டி வருமாறு:-

“முன்னணி கதாநாயகர்களுடன் நடிக்க வாய்ப்புகள் வருகின்றன. ஓய்வில்லாமல் படங்களில் நடிப்பது மகிழ்ச்சியாக உள்ளது. எத்தனை படங்களில் நடித்தாலும் எவ்வளவு பெரிய நடிகர்களுடன் ஜோடி சேர்ந்தாலும் கர்வம் இல்லாமல் எளிமையாகவே இருப்பேன். அலங்காரம் ஆடம்பரங்கள் பிடிக்காது.

கதாநாயகிகள் சினிமாவில் அழகாக இருக்க மெனக்கெடலாம். நிஜ வாழ்க்கையில் தேவை இல்லை. எனக்கு மேக்கப் போட்டுக் கொள்வது நன்றாக அலங்கரித்துக்கொள்வது பிடிக்காது. என்னை போன்ற நடிகைகளை திரையில் பார்க்க ரசிகர்கள் விரும்புவார்களா? என்று முதல் படத்தில் நடிக்கும்போது பயந்தேன்.

கதாபாத்திரம் நன்றாக இருந்தால் கவர்ச்சியாக இல்லாவிட்டாலும் வரவேற்பார்கள் என்று அதற்கு அப்புறம் புரிந்தது. நான் எப்படி இருக்கிறேனோ அப்படி சாதாரண பெண்ணாக இருக்கவே பிடிக்கும். வெளியில் போனால்கூட மேக்கப் போட்டுக்கொள்ள மாட்டேன். வாய்ப்புகள் வருகிறது என்பதற்காக எல்லா படங்களையும் ஒத்துக்கொள்ள மாட்டேன். நான் ஒப்புக்கொள்ளும் படங்களுக்கு நூறு சதவீதம் என்னுடைய ஒத்துழைப்பை கொடுப்பேன். ஒரு நல்ல சினிமாவுக்காக இன்னும் 10 வருடங்கள் கூட காத்து இருக்க தயார்.”

இவ்வாறு ராஷ்மிகா கூறினார்.