சினிமா செய்திகள்

3 அவித்த முட்டைகளுக்கு ரூ.1672 ‘பில்’லா?இசையமைப்பாளர் வியப்பு + "||" + 3 for boiled eggs Rs .1672 'pilla? The composer is amazing

3 அவித்த முட்டைகளுக்கு ரூ.1672 ‘பில்’லா?இசையமைப்பாளர் வியப்பு

3 அவித்த முட்டைகளுக்கு ரூ.1672 ‘பில்’லா?இசையமைப்பாளர் வியப்பு
பிரபல இந்தி நடிகர் ராகுல்போஸ் சில மாதங்களுக்கு முன்பு நட்சத்திர ஓட்டலில் சாப்பிட்ட 2 வாழைப் பழங்களுக்கு ரூ.422 பில் போட்டதை டுவிட்டரில் வெளியிட்டார்.
பிரபல இந்தி நடிகர் ராகுல்போஸ் சில மாதங்களுக்கு முன்பு நட்சத்திர ஓட்டலில் சாப்பிட்ட 2 வாழைப் பழங்களுக்கு ரூ.422 பில் போட்டதை டுவிட்டரில் வெளியிட்டார். இது சர்ச்சையாகி வலைத்தளங்களில் விவாதிக்கப்பட்டன. இதையடுத்து குறிப்பிட்ட அந்த ஓட்டலுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அதேபோல் இன்னொரு சர்ச்சை தற்போது கிளம்பி உள்ளது. இந்தி இசையமைப்பாளரும் பாடகருமான ஷேகர் ராவ்ஜியானி ஆமதாபாத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலுக்கு சென்று 3 அவித்த முட்டைகளை ஆர்டர் கொடுத்து வாங்கி சாப்பிட்டுள்ளார். அதற்காக ஜி.எஸ்.டி. மற்றும் சேவை வரிகளுடன் சேர்த்து ரூ.1672 ‘பில்’ வழங்கப்பட்டது.

அந்த பில்லை பார்த்த ஷேகர் ராவ்ஜியானி அதிர்ச்சியானார். 3 முட்டைகளுக்கு ரூ.1672 விலையா? என்று ஆச்சரியப்பட்டார். அந்த பில்லை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். அது வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இதைப்பார்த்த சிலர் நட்சத்திர ஓட்டலில் இவ்வளவு விலை போடுவதெல்லாம் சகஜம் இதை சர்ச்சையாக்க கூடாது என்று பதிவிட்டுள்ளனர்.