சினிமா செய்திகள்

போனிகபூருடன் சந்திப்பு - புதிய படத்தில் அஜித் ஜோடி நயன்தாரா? + "||" + Meeting with Bonigapur In the new movie Ajith Jodi Nayanthara

போனிகபூருடன் சந்திப்பு - புதிய படத்தில் அஜித் ஜோடி நயன்தாரா?

போனிகபூருடன் சந்திப்பு - புதிய படத்தில் அஜித் ஜோடி நயன்தாரா?
நேர்கொண்ட பார்வை படத்துக்கு பிறகு அஜித்குமார் ‘வலிமை’ படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை வினோத் இயக்குகிறார். போனிகபூர் தயாரிக்கிறார்.
அஜித்குமார் ‘வலிமை’  அதிரடி சண்டை படமாக தயாராகிறது. அஜித்குமார் போலீஸ் அதிகாரியாக நடிப்பதாக கூறப்படுகிறது. இதற்காக தோற்றத்தை இளமையாக மாற்றி இருக்கிறார்.

மோட்டார் சைக்கிள் பந்தயம் மற்றும் கார்பந்தய காட்சிகள் இடம்பெறுகின்றன. வில்லனாக நடிக்க அருண் விஜய்யை பரிசீலிக்கின்றனர். கதாநாயகியாக நயன்தாரா, திரிஷா, தமன்னா, நஸ்ரியா ஆகியோரில் ஒருவர் தேர்வு செய்யப்படுவார் என்று பேசப்பட்டு வந்தது. இந்த நிலையில் நயன்தாராவும் அவரது காதலர் விக்னேஷ் சிவனும் போனிகபூரை சந்தித்து பேசி உள்ளனர்.


அப்போது போனிகபூரின் மகள் குஷி கபூரும் உடன் இருந்தார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றன. சந்திப்பின்போது அஜித்தின் வலிமை படத்தில் அவருக்கு ஜோடியாக நடிப்பது குறித்து நயன்தாராவுடன் போனிகபூர் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கலாம் என்று தகவல் பரவி வருகிறது.

ஆனாலும் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. ஏற்கனவே பில்லா, ஏகன், ஆரம்பம், விஸ்வாசம் ஆகிய படங்களில் இருவரும் ஜோடியாக நடித்துள்ளனர். நயன்தாரா தற்போது ரஜினிகாந்தின் தர்பார் படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்து கொரிய மொழி படத்தின் தமிழ் ரீமேக்காக தயாராகும் ‘நெற்றிக்கண்’ படத்தில் நடிக்க உள்ளார்.