சினிமா செய்திகள்

பகவதி அம்மன் வேடத்தில் நயன்தாராவிரதம் இருந்து நடிக்கிறார் + "||" + Nayanthara in the role of Bhagwati Amman

பகவதி அம்மன் வேடத்தில் நயன்தாராவிரதம் இருந்து நடிக்கிறார்

பகவதி அம்மன் வேடத்தில் நயன்தாராவிரதம் இருந்து நடிக்கிறார்
மூக்குத்தி அம்மன் என்ற படத்தில் நடிகை நயன்தாரா பகவதி அம்மனாக நடிக்கிறார்.
தமிழ் பட உலகில் தொடர்ந்து நம்பர்-1 இடத்தில் இருக்கும் நயன்தாரா வித்தியாசமான கதை, கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். விஜய் ஜோடியாக நடித்த பிகில் தீபாவளிக்கு திரைக்கு வந்தது. ரஜினிகாந்துடன் நடித்துள்ள தர்பார் பொங்கலுக்கு வெளியாகிறது. அடுத்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் நெற்றிக்கண் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் மூக்குத்தி அம்மன் என்ற புதிய படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகி உள்ளார். இந்த படத்தை எல்.கே.ஜி. படத்தில் நடித்து பிரபலமான ஆர்.ஜே. பாலாஜி இயக்குகிறார். கன்னியாகுமரியில் உள்ள பகவதி அம்மன் மகிமைகளை சொல்லும் பக்தி படமாக தயாராகிறது என்றும் நயன்தாரா பகவதி அம்மனாக நடிக்கிறார் என்றும் ஆர்.ஜே. பாலாஜி கூறினார். ஏற்கனவே தெலுங்கில் தயாராகி தமிழிலும் டப்பிங் செய்து வெளியிடப்பட்ட ஸ்ரீராமராஜ்ஜியம் படத்தில் சீதை வேடத்தில் நயன்தாரா நடித்து இருந்தார். படப்பிடிப்பு முடியும் வரை அசைவ உணவை தவிர்த்து சைவ உணவுகளை மட்டுமே சாப்பிட்டு விரதம் இருந்து நடித்தார். அதுபோல் மூக்குத்தி அம்மன் படத்திலும் விரதம் இருந்து நடிப்பேன் என்று நயன்தாரா கூறியதாக ஆர்.ஜே. பாலாஜி தெரிவித்தார்.

மேலும் அவர் கூறும்போது, “தற்போது பேய் படங்கள் அதிகம் வருகின்றன. பக்தி படங்களை பார்த்து 15 வருடங்கள் ஆகிவிட்டது. எனவேதான் மூக்குத்தி அம்மன் பக்தி படத்தை எடுக்கிறேன். பெரும்பகுதி படப்பிடிப்பு கன்னியாகுமரியில் நடைபெறும்” என்றார்.