‘ராப்’ பாடல் பாடிய சூர்யா


‘ராப்’ பாடல் பாடிய சூர்யா
x
தினத்தந்தி 19 Nov 2019 11:15 PM GMT (Updated: 2019-11-20T03:00:24+05:30)

‘சூரரை போற்று’ படத்தில் நடிகர் சூர்யா தனது சொந்த குரலில் ராப் பாடலை பாடி இருக்கிறார்.

காப்பான் படத்துக்கு பிறகு சுதா கொங்கரா இயக்கும் ‘சூரரை போற்று’ படத்தில் சூர்யா நடித்துள்ளார். அபர்ணா பாலமுரளி, மோகன்பாபு, ஜாக்கி ஷெராப், கருணாஸ் ஆகியோரும் நடித்துள்ளனர். படத்தில் சூர்யாவின் முதல் தோற்றம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

இதன் படப்பிடிப்பு முடிந்து டப்பிங், கிராபிக்ஸ் உள்ளிட்ட தொழில்நுட்ப பணிகள் நடக்கின்றன. படம் விரைவில் திரைக்கு வருகிறது. இந்த படத்துக்கு விசேஷமாக தீம் மியூசிக் தயாராகி வருவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது இந்த தீம் மியூசிக்கில் சூர்யா தனது சொந்த குரலில் ராப் பாடலை பாடி இருப்பதாக ஜி.வி.பிரகாஷ் டுவிட்டரில் தெரிவித்து புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

இந்த தகவலை ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள். ஏற்கனவே அஞ்சான் படத்தில் சூர்யா சொந்த குரலில் பாடி இருந்தார். வெங்கட் பிரபு இயக்கும் பார்ட்டி படத்திலும் சூர்யாவும், கார்த்தியும் இணைந்து ஒரு பாடலை பாடி உள்ளனர்.

Next Story