சினிமா செய்திகள்

தமிழகத்தின் நலனுக்காகவே இணைப்பு என்று சொல்லி இருக்கிறோம் - கமல்ஹாசன் + "||" + We have called the link for the benefit of Tamil Nadu - Kamal Haasan

தமிழகத்தின் நலனுக்காகவே இணைப்பு என்று சொல்லி இருக்கிறோம் - கமல்ஹாசன்

தமிழகத்தின் நலனுக்காகவே இணைப்பு என்று சொல்லி இருக்கிறோம் - கமல்ஹாசன்
தமிழகத்தின் நலனுக்காகவே இணைப்பு என்று சொல்லி இருக்கிறோம் என கமல்ஹாசன் கூறினார்.
சென்னை

கமல் தலைமையில் மக்கள் நீதி மய்யத்தின் செயற்குழு, மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில்  நடைபெற்றது.

கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் கருத்துக் கேட்கப்பட்டது. அரசியலில் ரஜினியுடன் இணைந்து செயலாற்றுவது  குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆலோசனை கூட்டத்தில், கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் மத்தியில் கமல்ஹாசன் பேசும் என் மீது காட்டும் அன்பை தமிழக மக்கள் மீதும் காட்ட வேண்டும். என்னுடைய உழைப்பிற்கு இனிவரும் காலங்களில்  பலன் கிடைக்கும் என கூறினார்.

பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த கமல்ஹாசன்,

தமிழக மக்களின் நலன் கருதி தேவைப்பட்டால் இணைவோம். ரஜினியுடன் இணைப்பு என்பதை இந்த தேதியில் என்று சொல்ல முடியாது.  தமிழகத்தின் நலனுக்காகவே இணைப்பு என்று சொல்லி இருக்கிறோம். எங்கள் இருவரின் நட்பை விட தமிழகத்தின் நலன்தான் முக்கியம் என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. 24 மணி நேரத்தில் விஜயின் குட்டி கதை பாடலுக்கு "90 லட்சம் பார்வைகள் 10 லட்சம் லைக்குகள் "
24 மணி நேரத்தில் விஜயின் மாஸ்டர் படத்தின் குட்டி கதை பாடல் பெற்ற பார்வைகள் மற்றும் லைக்குகள் விவரத்தை சோனி நிறுவனம் அறிவித்து உள்ளது.
2. தமிழ் சினிமா சிறிய பிரச்சினையில் இருந்து பெரிய பிரச்சினை நோக்கி செல்கிறது-ஆர்.கே.செல்வமணி
தமிழ் திரைப்படத்துறையை எதிரி போல பார்க்கும் நிலை உருவாகிவிட்டது என்று, பெஃப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
3. நடிகர் விஜய்- அவரது மனைவி சங்கீதாவிடமும் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை
நடிகர் விஜய்- அவரது மனைவி சங்கீதாவிடமும் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
4. குடியுரிமை திருத்த சட்டத்தால் இஸ்லாமியர்களுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை- ரஜினிகாந்த்
மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தினால் தான் யார் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் என்பது தெரியவரும் என நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.
5. தமிழ்நாட்டை ரஜினிகாந்த் ஆட்சி செய்ய ஒருபோதும் அனுமதிக்க முடியாது..!- பாரதிராஜா
தமிழ்நாட்டை ரஜினிகாந்த் ஆட்சி செய்ய ஒரு போதும் அனுமதிக்க முடியாது என பாரதிராஜா கூறி உள்ளார்.