சினிமா செய்திகள்

கமலுக்கு நாளை அறுவை சிகிச்சை... ஓய்வுக்குப் பிறகு கட்சியினரை சந்திப்பார் + "||" + Tomorrow Kamal has surgery ... Retiring and meeting party

கமலுக்கு நாளை அறுவை சிகிச்சை... ஓய்வுக்குப் பிறகு கட்சியினரை சந்திப்பார்

கமலுக்கு நாளை அறுவை சிகிச்சை... ஓய்வுக்குப் பிறகு கட்சியினரை சந்திப்பார்
நவம்பர் 22-ம் தேதி கமலுக்கு, காலில் அறுவை சிகிச்சை நடைபெறவுள்ளதாகவும் அதனைத் தொடர்ந்து அவர் ஓய்வெடுக்கவுள்ளதாகவும் மக்கள் நீதி மய்யம் தெரிவித்துள்ளது.
சென்னை

கமல்ஹாசன் ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் 'இந்தியன் 2' படத்தில் நடித்து  வருகிறார் . இதன் படப்பிடிப்புக்கு இடையே தனது பிறந்த நாள் கொண்டாட்டம் மற்றும் திரையுலகிற்கு வந்து 60-ம் ஆண்டு கொண்டாட்டம் ஆகியவற்றையும் முடித்துள்ளார். இந்தப் பணிகளுக்கு இடையே மக்கள் நீதி மய்யத்தின் கட்சிப் பணிகளையும் கவனித்து வருகிறார்.

இந்நிலையில் கமலுக்கு நாளை காலில் அறுவை சிகிச்சை நடைபெறவுள்ளதாகவும், அதனைத் தொடர்ந்து அவர் ஓய்வில் இருக்கப் போவதாகவும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவர் ஆர்.மகேந்திரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''கடந்த 2016-ம் ஆண்டு எதிர்பாராமல் நடந்த ஒரு விபத்தின் காரணமாக கமலின் வலது காலில் முறிவு ஏற்பட்டது. அம்முறிவினைச் சரி செய்வதற்காக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு அவரது காலில் டைட்டேனியம் கம்பி ஒன்று பொருத்தப்பட்டது.

அரசியல் மற்றும் சினிமாவில் கமலுக்கு இருந்த தொடர் வேலைப்பளு காரணமாக அக்கம்பியை அகற்றுவதற்கான சூழல் அமையாமல் தள்ளிப் போய்க் கொண்டிருந்தது.

மருத்துவர்களின் ஆலோசனைப்படி கமல்ஹாசனுக்கு நாளை (நவம்பர் 22) அக்கம்பியை அகற்றும் சிகிச்சை மேற்கொள்ளப்பட இருக்கிறது. சிகிச்சை மற்றும் அதன் தொடர்ச்சியாக சில நாட்கள் ஓய்விற்குப் பின் கமல் நம்மைச் சந்திப்பார்'' என்று ஆர்.மகேந்திரன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவை ஒருசாரார் மட்டுமே வாழும் நாடாக மாற்ற முயல்வது மடமை - கமல்ஹாசன்
குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவில் இந்தியாவை ஒருசாரார் மட்டுமே வாழும் நாடாக மாற்ற முயல்வது மடமை என கமல்ஹாசன் விமர்சனம் செய்துள்ளார்.
2. மக்களின் நலனுக்காக, நானும், கமலும் இணையும் சூழல் ஏற்பட்டால் நிச்சயம் இணைவோம்: ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி
மக்களின் நலனுக்காக கமலுடன் இணையும் சூழல் ஏற்பட்டால் நிச்சயம் இணைவோம் என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
3. கமல்ஹாசனுக்கு டாக்டர் பட்டம் - ஒடிசா பல்கலைக்கழகம் இன்று வழங்குகிறது
கமல்ஹாசனுக்கு ஒடிசா பல்கலைக்கழகம் இன்று டாக்டர் பட்டம் வழங்க உள்ளது.
4. குடும்ப உறுப்பினர்களுடன் பிறந்த நாளை கொண்டாடிய கமல்ஹாசன்
பரமக்குடியில் நீண்ட நாட்களுக்கு பின் கமலின் குடும்ப உறவுகள் ஒரே இடத்தில் சந்தித்தனர். அதே சமயம் இவர்களின் குடும்ப உறுப்பினர்களின் புகைப்படத்தில் பூஜா குமார் இருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
5. போக்கிடத்திற்கு வழியில்லாமல் நான் அரசியலுக்கு வரவில்லை -கமல்ஹாசன் பேச்சு
நடிகர் கமல்ஹாசனன் தனது பிறந்தநாளை முன்னிட்டு பரமக்குடியில் அவரது தந்தை சீனிவாசனின் சிலையை திறந்து வைத்து பேசினார்.