சினிமா செய்திகள்

“தொடர்ந்து படங்கள் தயாரிப்பேன்”-இயக்குனர் பா.ரஞ்சித் + "||" + I will continue to produce films - Director Pa. Ranjith

“தொடர்ந்து படங்கள் தயாரிப்பேன்”-இயக்குனர் பா.ரஞ்சித்

“தொடர்ந்து படங்கள் தயாரிப்பேன்”-இயக்குனர் பா.ரஞ்சித்
தொடர்ந்து நல்ல கதையம்சம் உள்ள படங்களை தயாரிப்பேன் என்று இயக்குனர் பா.ரஞ்சித் கூறினார்.
அட்டகத்தி, மெட்ராஸ், காலா, கபாலி படங்களை இயக்கி பிரபலமான பா.ரஞ்சித் நீலம் புரொடக்‌ஷன்ஸ் என்ற பட நிறுவனத்தை தொடங்கி பரியேறும் பெருமாள் படத்தை தயாரித்து வெளியிட்டார். தற்போது ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ என்ற இன்னொரு படத்தை தயாரித்துள்ளார்.

இதில் தினேஷ் நாயகனாகவும் ஆனந்தி நாயகியாகவும் நடித்துள்ளனர். அதியன் ஆதிரை இயக்கி உள்ளார். படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. விழாவில் இயக்குனர் பா.ரஞ்சித் பேசும்போது, “நான் தயாரித்துள்ள 2-வது படம் இது. தொடர்ந்து நல்ல கதையம்சம் உள்ள படங்களை தயாரிப்பேன். இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படத்தின் டிரெய்லருக்கு ரசிகர்கள் வரவேற்பு அளித்து இருந்தனர். சிறந்த படமாக தயாராகி உள்ளது. இந்த படம் அனைவருக்கும் பிடிக்கும்” என்றார்.

நடிகர் தினேஷ் பேசும்போது, “படங்களின் வெற்றி, வியாபார விஷயங்கள் எதுவும் எனக்கு தெரியாது. ஒரு படம் ஜெயித்த பிறகு பேசும்போதுதான் உற்சாகமாக இருக்கும். ஒரு இரும்பு கடையில் வேலை செய்பவனின் வாழ்க்கை எவ்வளவு துயரமானதாக இருக்கும் என்பதே இந்த படத்தின் கதை. கதையை கேட்கும்போதே மனது வலித்தது” என்றார்.

நடிகை ஆனந்தி பேசும்போது, “பா.ரஞ்சித் தயாரிக்கும் படங்களில் நடிக்க அழைத்தால் கதையே கேட்காமல் நடிப்பேன். அவர் எடுக்கும் படங்கள் அவ்வளவு வலிமையாக இருக்கும்” என்றார்.

ஆசிரியரின் தேர்வுகள்...