சினிமா செய்திகள்

ரூ.400 கோடியில் சரித்திர படம் ஜூனியர் என்.டி.ஆர். ஜோடியாக ஹாலிவுட் நடிகை + "||" + Junior NTR Paired Hollywood actress

ரூ.400 கோடியில் சரித்திர படம் ஜூனியர் என்.டி.ஆர். ஜோடியாக ஹாலிவுட் நடிகை

ரூ.400  கோடியில்  சரித்திர  படம் ஜூனியர்  என்.டி.ஆர்.  ஜோடியாக  ஹாலிவுட்  நடிகை
ஜூனியர் என்.டி.ஆர். ஜோடியாக ஹாலிவுட் நடிகை ஓலிவியா மோரிஸ் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
பாகுபலி படத்தை எடுத்து இந்தியா முழுவதும் பிரபலமான ராஜமவுலி இன்னொரு சரித்திர கதையம்சம் உள்ள படத்தை இயக்கி வருகிறார். தெலுங்கு நடிகர்கள் ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண் தேஜா, இந்தி நடிகர் அஜய்தேவ்கான், சமுத்திரக்கனி, அலியாபட் ஆகியோர் நடிக்கின்றனர்.

இதற்கு தற்காலிகமாக ஆர்.ஆர்.ஆர் என்று தலைப்பு வைத்துள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட அனைத்து இந்திய மொழிகளிலும் வெளியாக உள்ள இந்த படம் ரூ.400 கோடி செலவில் தயாராகிறது. சுதந்திர போராட்ட வீரர்களான அல்லுரி சித்ராமஜூ, கொமரம் பீம் ஆகியோர் வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகிறது.

இந்த படத்தில் ஜூனியர் என்.டி.ஆர். ஜோடியாக ஒப்பந்தம் செய்யப்பட்ட இங்கிலாந்து நடிகை டெய்சி எட்கர் ஜோன்ஸ் திடீரென்று விலகியதையடுத்து கதையை மாற்றி ஜோடி இல்லாமலேயே படத்தை எடுப்பதாக தகவல்கள் பரவின. இதனை படக்குழுவினர் மறுத்து ஜூனியர் என்.டி.ஆர். ஜோடியாக நடிக்க ஹாலிவுட் நடிகை ஓலிவியா மோரிஸை தேர்வு செய்து இருப்பதாக அறிவித்து உள்ளனர்.

மேலும் தோர், கிங் ஆர்தர் உள்பட பல ஹாலிவுட் படங்களில் நடித்துள்ள ரே ஸ்டீவன்சன் வில்லனாகவும் ஜேம்ஸ்பாண்ட் படமான எ வியூ டு கில், இண்டியானா ஜோன்ஸ், த லாஸ்ட் குருசேட் ஆகிய படங்களில் நடித்துள்ள ஐரிஸ் நடிகை அலிசான் டூடி வில்லியாகவும் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளனர்.

ஆசிரியரின் தேர்வுகள்...