ஆர்.கண்ணன் டைரக்‌ஷனில் மீண்டும் நகைச்சுவையில் கலக்கும் சந்தானம்!


ஆர்.கண்ணன் டைரக்‌ஷனில் மீண்டும் நகைச்சுவையில் கலக்கும் சந்தானம்!
x
தினத்தந்தி 22 Nov 2019 10:22 AM GMT (Updated: 2019-11-22T15:52:53+05:30)

ஆர்.கண்ணன் டைரக்‌ஷனில் வளர்ந்த ஒரு புதிய படத்தில் சந்தானம் மீண்டும் நகைச்சுவையில் கலக்கியிருக்கிறார். படத்தை பற்றி டைரக்டர் ஆர்.கண்ணன் கூறியதாவது:-

``ஒரு `டைட்டிலை' இந்த படத்துக்கு தேர்வு செய்தோம். அந்த `டைட்டிலை' ஏற்கனவே ஒரு நிறுவனம் பதிவு செய்திருப்பதால், வேறு `டைட்டிலை' தேடி வருகிறோம். கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கிய படப்பிடிப்பு சென்னை, ஐதராபாத் ஆகிய இடங்களில் நடைபெற்று கடந்த வாரம் முடிவடைந்தது.

படத்தின் பெயரில் ஒரு தனித்துவம் இருக்கும். சந்தானம் நகைச்சுவை, காதல், அதிரடி சண்டை காட்சிகள் என எல்லா ஏரியாவிலும் கலக்கியுள்ளார். குடும்பங்கள் பார்த்து ரசிக்கும் விதமாக முழுமையான மசாலா படமாக தயாராகி இருக்கிறது.

தாரா அலிஷா பெர்ரி கதாநாயகியாக நடித்துள்ளார். இன்னொரு நாயகியாக சுவாதி முப்பாலா நடித்து இருக்கிறார். இவர்களுடன் ஆனந்தராஜ், `மொட்ட' ராஜேந்திரன், சவுகார் ஜானகி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

படத்தில் 30 நிமிட காட்சிகள், 1980-களில் நடைபெறுவதாக அமைந்துள்ளது. இதற்காக ரூ.80 லட்சம் செலவில், ஒரு அரண்மனை அரங்கம் அமைக்கப்பட்டு, அதில் படப்பிடிப்பு நடைபெற்றது. அத்துடன் படப்பிடிப்பு முடிவடைந்தது. 2020-ல் பிப்ரவரி மாதம் படம் திரைக்கு வரும்.''

Next Story