படப்பிடிப்பில் நடிகர் பிஜூ மேனன் தீக்காயம்
நடிகர் பிஜூ மேனனுக்கு படப்பிடிப்பில் தீக்காயம் ஏற்பட்டது.
தமிழில் மஜா, ஜூன் ஆர், தம்பி, பழனி, அரசாங்கம், அலிபாபா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளவர் பிஜூ மேனன். மலையாளத்தில் முன்னணி நடிகராக இருக்கிறார். தற்போது அய்யப்பனும் கோஷியும் என்ற மலையாள படத்தில் பிஜூ மேனன் நடித்து வருகிறார். சச்சி டைரக்டு செய்கிறார். இந்த படத்தில் அய்யப்பனாக பிஜூ மேனனும் கோஷியாக பிருத்விராஜும் நடிக்கின்றனர். கேரள மாநிலத்தில் உள்ள அட்டப்பாடி என்ற இடத்தில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. படத்தில் இடம்பெறும் தீவிபத்து காட்சியொன்றை படமாக்கினர். அப்போது பிஜூ மேனன் எதிர்பாராதவிதமாக கொழுந்து விட்டு எரிந்த தீயில் சிக்கினார்.
அவரது கால்களிலும் கையிலும் பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டு வலியால் அலறினார். உடனடியாக படக்குழுவினர் பிஜூ மேனனை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தை தொடர்ந்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.
Related Tags :
Next Story