சினிமா செய்திகள்

படமாகும் திருநங்கை வாழ்க்கை + "||" + The film is about transgender life

படமாகும் திருநங்கை வாழ்க்கை

படமாகும் திருநங்கை வாழ்க்கை
திருநங்கை அஞ்சலி அமீரின் வாழ்க்கை சினிமா படமாக தயாராகிறது.
கேரளாவை சேர்ந்த திருநங்கை அஞ்சலி அமீர். இவர் திரைப்படங்களில் நடித்து வருகிறார். ராம் இயக்கத்தில் மம்முட்டி நடித்த பேரன்பு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். அஞ்சலி அமீரின் வாழ்க்கை தற்போது சினிமா படமாக தயாராகிறது. இந்த படத்தை டினே ஜார்ஜ் இயக்குகிறார்.

அஞ்சலியின் இளம் வயது வாழ்க்கை, கல்வி, மாடல் அழகியாகி சினிமாவுக்கு வந்தது உள்ளிட்ட அம்சங்கள் படத்தில் இடம்பெறுகின்றன. மாடலாக இருக்கும் திருநங்கை ஆணாகவும் பெண்ணாகவும் சினிமாவில் நடிப்பது போன்று திரைக்கதை அமைத்துள்ளனர். திருநங்கைகள் வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சினைகளும் படத்தில் இடம்பெறுகிறது.

இதில் அஞ்சலி அமீர் வேடத்தில் அவரே நடிக்கிறார் என்பது சிறப்பு அம்சம். படம் குறித்து அஞ்சலி அமீர் கூறும்போது, “எனது வாழ்க்கை படமாவது மகிழ்ச்சியாக உள்ளது. எனது சந்தோஷத்தை வெளிப்படுத்த வார்த்தைகளே இல்லை. இந்த படத்தில் எனது கதாபாத்திரத்தில் நானே நடிக்கிறேன். அடுத்த வருடம் மே மாதம் படப்பிடிப்பு தொடங்கும்” என்றார்.