21 வருட திருமண வாழ்க்கை முறிந்தது நடிகர் அர்ஜுன் ராம்பால் விவாகரத்து
பிரபல இந்தி நடிகர் அர்ஜுன் ராம்பாலுக்கு விவாகரத்து வழங்கி மும்பை பாந்த்ரா குடும்ப நல கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
தேசிய விருது பெற்ற பிரபல இந்தி நடிகர் அர்ஜுன் ராம்பால். இவருக்கும் முன்னாள் இந்திய அழகி மெகர் ஜெஸ்சியாவுக்கும் 1998-ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த வருடம் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிவதாக அறிவித்தனர்.
அவர்கள் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், “எங்களது திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாகவும் அழகாகவும் நகர்ந்தது. காதலும் நிரம்பி இருந்தது. தற்போது பிரிவதற்கு சரியான தருணம் என்று கருதி வெவ்வேறு பாதைகளில் பயணிக்கிறோம். ஆனாலும் காதல் அப்படியே இருக்கும். எங்கள் குழந்தைகள் நலனில் அக்கறை எடுப்போம்” என்று குறிப்பிட்டு இருந்தனர்.
பரஸ்பர சம்மதம் அடிப்படையில் விவாகரத்து கோரி மும்பை பாந்த்ரா குடும்ப நல கோர்ட்டில் ஏப்ரல் மாதம் இருவரும் மனுதாக்கல் செய்தனர். இருதரப்பினரையும் விசாரித்த நீதிபதி தற்போது விவாகரத்து வழங்கி தீர்ப்பு அளித்து உள்ளார். இரண்டு மகள்களும் மெகர் ஜெஸ்சியாவுடன் வளர உள்ளனர்.
அர்ஜுன் ராம்பால் தென் ஆப்பிரிக்க மாடல் அழகி கேப்ரியல்லாவை காதலித்து வருகிறார். அவரை 2-வது திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.
Related Tags :
Next Story