சினிமா செய்திகள்

குருவியார் கேள்வி-பதில்கள் + "||" + Kuruviyar Question and Answers

குருவியார் கேள்வி-பதில்கள்

குருவியார் கேள்வி-பதில்கள்
உங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார், குருவியார். கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி. குருவியார், தினத்தந்தி, சென்னை-600007
குருவியாரே, சமீபகால கதாநாயகிகளில், ரஜினிகாந்துக்கு பொருத்தமான ஜோடி யார்? (பி.விக்ரம் குமார், சென்னை)

ராதிகா ஆப்தே! ‘கபாலி’ படத்தில் ரஜினிகாந்துக்கு அத்தனை பொருத்தமாக இருந்தார்!

***

தமிழ் திரையுலகில், அதிக சம்பளம் வாங்கும் வில்லன் யார்? (எஸ்.சாய்ராம், கோவை)

பிரகாஷ்ராஜ்! தமிழ் திரையுலகில் மட்டுமல்லாமல், தென்னிந்திய சினிமாவில், இதுவரை எந்த வில்லன் நடிகரும் வாங்காத அளவுக்கு அதிக சம்பளம் வாங்கி கொண்டிருக்கிறார்!

***

குருவியாரே, நயன்தாரா நீச்சல் உடையில் நடித்த படம் எது? அந்த படத்தின் கதாநாயகன் யார்? (கே.சீனிவாசராவ், அரக்கோணம்)

நயன்தாரா நீச்சல் உடையில் நடித்த படம், ‘பில்லா.’ அந்த படத்தின் நாயகன், அஜித்குமார்!

***

‘‘கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்ததம்மா’’ என்ற பாடலுக்கு ஆடிய சாயாசிங்கின் அறிமுக படம் (தமிழில்) எது? அந்த படம் எப்போது திரைக்கு வந்தது? (ஆர்.சுந்தரபாண்டியன், மதுரை)

சாயாசிங்கின் அறிமுக படம், ‘திருடா திருடி.’ அந்த படம், 2003–ல் திரைக்கு வந்தது!

***

குருவியாரே, கார்த்தி நடிப்பில், ‘கைதி’ படத்தின் இரண்டாம் பாகம் வர வாய்ப்பு இருக்கிறதா? (எஸ்.சுரேஷ், சங்கரன்கோவில்)

‘கைதி’ படத்தின் இரண்டாம் பாகம் வருவதற்கு நிறையவே வாய்ப்பு இருக்கிறது!

***

‘நடிகர் திலகம்’ சிவாஜிகணேசன் நடித்த ‘ராமன் எத்தனை ராமனடி,’ ‘தெய்வமகன்’ ஆகிய படங்களை இயக்கியவர் யார்–யார்? (வி.ராஜேந்திரன், குன்னூர்)

‘ராமன் எத்தனை ராமனடி’ படத்தை இயக்கியவர், பி.மாதவன். ‘தெய்வமகன்’ படத்தை இயக்கியவர், ஏ.சி.திருலோகசந்தர்.

***

குருவியாரே, கவர்ச்சி நடிகைகள் விஜயலலிதா, டிஸ்கோசாந்தி, அனுராதா, பபிதா ஆகிய 4 பேரில், வாரிசு நடிகை யார்? (கோ.மீனாட்சி சுந்தரம், குமாரபாளையம்)

டிஸ்கோ சாந்தி, பபிதா ஆகிய இருவரும் வாரிசு நடிகைகள்தான். டிஸ்கோ சாந்தி, மறைந்த நடிகர் சி.எல்.ஆனந்தனின் மகள். பபிதா, மறைந்த வில்லன் நடிகர் ஜஸ்டின் மகள்!

***

கவுதம் வாசுதேவ் மேனன் டைரக்‌ஷனில், மிக குறுகிய நாட்களில் தயாராகி வெளிவந்த படம் எது, அதில் கதாநாயகன் யார், கதாநாயகி யார்? (வெ.தமிழ்செல்வன், புதுக்கோட்டை)

கவுதம் வாசுதேவ் மேனன் டைரக்‌ஷனில், மிக குறுகிய காலத்தில் தயாராகி வெளிவந்த படம், ‘பச்சைக்கிளி முத்துச்சரம்.’ அதில் கதாநாயகன், சரத்குமார். அந்த படத்தின் கதாநாயகியாக இல்லாமல் வில்லியாக நடித்தவர், ஜோதிகா!

***

குருவியாரே, தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை யார்? அவர் சம்பாதிக்கும் பணத்தை எல்லாம் எங்கே முதலீடு செய்கிறார்? (ஜோ.சார்லஸ், தூத்துக்குடி)

தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்குபவர், நயன்தாரா. அவர் சம்பாதிக்கும் பணத்தை பல நகரங்களில் உள்ள ‘ரியல் எஸ்டேட்’டில் முதலீடு செய்கிறாராம்! (மண்ணில் முதலீடு செய்தால், அது எதிர்காலத்தில் பொன்னாகும் என்பதை புரிந்து கொண்ட புத்திசாலி பெண், நயன்தாரா!)

***

சாய் தன்சிகா சமிபத்தில் தனது பிறந்த நாளை எப்படி கொண்டாடினார்? (இரா.மதியழகன், கரூர்)

சாய் தன்சிகா தனது பிறந்த நாளை மிக எளிமையாக கொண்டாடினார். பிறந்தநாளையொட்டி அவர் சென்னையில் உள்ள ஒரு ஆதரவற்றோர் இல்லம் சென்று, அங்குள்ளவர்களுக்கு மதிய உணவு வழங்கியதுடன், அவர்களுடன் அமர்ந்து சாய் தன்சிகாவும் சாப்பிட்டாராம்!

***

குருவியாரே, விக்ரம் பிரபு நடித்த ‘அசுரகுரு,’ ‘வானம் கொட்டட்டும்’ ஆகிய படங்களில், எந்த படம் முதலில் திரைக்கு வரும்? (கே.ஏழுமலை, கும்மிடிப்பூண்டி)

விக்ரம் பிரபு நடித்த படங்களில் முதலில் திரைக்கு வருவது, ‘அசுரகுரு.’ இந்த படம், அடுத்த மாதம் (டிசம்பர்) 5–ந் தேதி திரைக்கு வர இருக்கிறது. ‘வானம் கொட்டட்டும்’ படம், பிப்ரவரி மாதம் வெளிவரும்!

***

காஜல் அகர்வாலுக்கு எது ரொம்ப அழகு? கண்களா, உதடுகளா, உடற்கட்டா? (எம்.தட்சிணாமூர்த்தி, தஞ்சை)

காஜல் அகர்வாலுக்கு அவருடைய கவர்ச்சிகரமான உடற்கட்டே மிக அழகு!

***

குருவியாரே, மறைந்த நடிகை தேவிகாவின் மகள் கனகா எங்கே இருக்கிறார்? எப்படி இருக்கிறார்? (பி.முனிசாமி, திண்டுக்கல்)

கனகா, சென்னை மந்தவெளியில் உள்ள அவருடைய சொந்த வீட்டில் வசிக்கிறார். உள்பக்கமாக பூட்டிய வீட்டுக்குள், பூஜை...புனஸ்காரம்...என்று தீவிர ஆன்மிகத்தில் நம்பிக்கை கொண்டவராக இருக்கிறாராம்!

***

‘‘கண்ணம்மா கண்ணம்மா அழகு பூஞ்சிலை என்னுள்ளே என்னுள்ளே பொழியும் தேன் மழை...’’ என்ற பாடல் இடம்பெற்ற படம் எது? இந்த படத்தில் டீச்சராக நடித்த நடிகையின் பெயர் என்ன? (ஆர்.ஒய்.பசுபதி ராபர்ட், கரிவேடு கிராமம்)

அந்த பாடல் இடம்பெற்ற படம், ‘றெக்க.’ டீச்சராக நடித்தவர், சிஜா ரோஸ்!

***

குருவியாரே, தனுஷ் நடித்த ‘அசுரன்’ படம் வெற்றி படம்தானே...? (என்.மல்லிகா, திருவண்ணாமலை)

‘அசுரன்,’ மிகப்பெரிய வெற்றி படம்!

***

‘‘வேறு எந்த நடிகையிடமும் இல்லாத ஒரு அம்சம், ஆண்ட்ரியாவிடம் மட்டும் உள்ளது’’ என்கிறேன், நான். எனது நண்பனோ, ஆண்ட்ரியாவை விட நமீதாதான் அழகி என்கிறான். யார் சொல்வது உண்மை? (எம்.அன்வர் பாட்ஷா, கொருக்குப்பேட்டை)

ஆண்ட்ரியாவை விட நமீதா, ‘சீனியர்!’ ஓட்டெடுப்புக்கு விட்டால், நமீதாவுக்கே அதிக ஓட்டு கிடைக்கும் என்கிறார், ஒரு இளம் பட அதிபர்!

***

குருவியாரே, ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் சூர்யா நடிக்காதது ஏன்? (இரா.ரெங்கசாமி, வடுகப்பட்டி)

அவருக்கு பொருத்தமான வேடம் அந்த படத்தில் இல்லையாம்!

***

தமிழ் திரையுலகின் முக்கிய பிரச்சினை எது? அந்த பிரச்சினையை தீர்க்க முடியுமா? (ஜே.துரை, கொட்டாம்பட்டி)

திருட்டு வீடியோவும், புதிய படங்கள் திரைக்கு வந்த அன்றே இணையத்திலும் வந்து விடுவதும்தான் தமிழ் திரையுலகின் முக்கிய பிரச்சினைகள்!

***

குருவியாரே, மொட்டை ராஜேந்திரன் ஒரு படத்துக்கு எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்? (ஹரிகரன், பொள்ளாச்சி)

தயாரிப்பாளர்கள் கொடுக்கிற சம்பளத்தை மொட்டை ராஜேந்திரன் வாங்கிக் கொள்கிறாராம்!

***

‘வெண்ணிற ஆடை’ மூர்த்தியை திரையில் பார்த்து வெகு நாட்கள் ஆகிவிட்டதே...அவர் என்ன செய்கிறார்? (மு.செண்பக மூர்த்தி, மயிலாடுதுறை)

‘வெண்ணிற ஆடை’ மூர்த்தியின் மகன் அமெரிக்காவில் இருக்கிறார். அவரை பார்க்க வெ.ஆ.மூர்த்தி அடிக்கடி அமெரிக்கா பறந்து விடுகிறாராம்!

***