சினிமா செய்திகள்

வட சென்னை படத்தின் இரண்டாம் பாகம் வருமா, வராதா? + "||" + Will come or not the second part of North Chennai film?

வட சென்னை படத்தின் இரண்டாம் பாகம் வருமா, வராதா?

வட சென்னை படத்தின் இரண்டாம் பாகம் வருமா, வராதா?
தனுஷ் நடித்த ‘வட சென்னை’ படம் வெற்றி பெற்றதை அடுத்து, அந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளிவரும் என்று கூறப்பட்டது.
தனுசும், டைரக்டர் வெற்றிமாறனும் அதை உறுதி செய்தார்கள். ‘வட சென்னை’யை அடுத்து தனுஷ், ‘அசுரன்’ படத்தில் நடித்து, அதை மிகப்பெரிய வெற்றி படமாக்கி விட்டார். இந்த படம் வசூலிலும் சாதனை புரிந்தது. அந்த அளவுக்கு பெரிய வெற்றியையும், வசூல் சாதனையையும் அடுத்த படம் செய்து காட்ட வேண்டும் என்ற உற்சாகத்துடன் காணப்படுகிறார், தனுஷ். இந்த வெறியுடன் அவர் அடுத்த படத்தை எதிர்நோக்கி இருக்கிறார்.

அவருடைய நண்பரும், டைரக்டருமான வெற்றிமாறன் இப்போது ஒரு ‘வெப் சீரிஸ்’சில் ஒரு படம் தயாரிக்கும் வேலையில் மும்முரமாக இருக்கிறார். அதனால், ‘வடசென்னை-2’ வருமா, வராதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.