சினிமா செய்திகள்

கார்த்தி படத்தின் சாதனை + "||" + Achievements of Karthi film

கார்த்தி படத்தின் சாதனை

கார்த்தி படத்தின் சாதனை
தீபாவளிக்கு திரைக்கு வந்த 2 படங்களில், கார்த்தி நடித்த ‘கைதி’யும் ஒரு படம்.
இந்த படம் திரைக்கு வந்தபோது, மிக குறைந்த தியேட்டர்களே கிடைத்தன. படத்தை பார்த்த பொதுமக்களின் கருத்துகளும், விமர்சன ரீதியிலான கருத்துகளும் இந்த படத்தை தூக்கி நிறுத்தின.

படத்தில் காதல் காட்சிகளும், பாடல் காட்சிகளும் இல்லை. சண்டை காட்சிகள் புதுமையான தொழில் நுட்பத்தில் படமாக்கப்பட்டிருந்தன. திரைக்கதை விறுவிறுப்பாக இருந்தது. அதுவே படத்தின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது.

கார்த்தி நடித்த படங்களின் வசூல் இதுவரை ரூ.100 கோடியை எட்டவில்லை. முதல்முறையாக, ‘கைதி’ படம் அந்த சாதனையை எட்டியிருக்கிறது.