சினிமா செய்திகள்

நடிகை வாணிகபூர் மீது வழக்கு + "||" + Case against actress Vani Kapoor

நடிகை வாணிகபூர் மீது வழக்கு

நடிகை வாணிகபூர் மீது வழக்கு
தமிழில் நானி ஜோடியாக ‘ஆஹா கல்யாணம்’ படத்தில் நடித்தவர் வாணிகபூர்.
சமீபத்தில் ஹிருத்திக் ரோஷன் நடித்து திரைக்கு வந்த ‘வார்’ இந்தி படத்தில் கதாநாயகியாக நடித்து இருந்தார். தற்போது ரன்பீர் கபூர், சஞ்சய்தத்துடன் ‘ஷாம்ஷேரா’ என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார்.

சமூக வலைத்தள பக்கத்தில் வாணிகபூர் கவர்ச்சி மேலாடை அணிந்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டார். அதில் ஹரே ராம் ஹரே கிருஷ்ணா என்ற வாசகம் இருந்தது.


புகைப்படத்தின் கீழ் வாழ்க்கையை மிகவும் சீரியஸ் ஆக எடுத்துக்கொள்ள வேண்டாம். இங்கு யாருமே உயிருடன் இருக்கப் போவதில்லை என்ற வாசகத்தை பதிவிட்டு இருந்தார்.

இந்துக்கள் மனதை புண்படுத்தும்படியும் இந்து கடவுள்களை அவமதிப்பதுபோன்றும் வாணிகபூர் மேலாடை உள்ளது என்று எதிர்ப்புகள் கிளம்பின. ராமர் பெயர் எழுதப்பட்ட மேலாடையை எப்படி அணியலாம் என்று கண்டனங்கள் கிளம்பின. மும்பையை சேர்ந்த ராமா சாவந்த் என்பவர் ஜோஷிமார்க் போலீசில் ராமர் பெயர் எழுதிய அரைகுறை ஆடை அணிந்து இந்துக்கள் மனதை வாணிகபூர் புண்படுத்தி விட்டதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் அளித்துள்ளார்.

போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். வாணிகபூரிடம் நேரில் விசாரணை நடத்த தேடி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. விசாரணைக்கு சென்ற போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்த 2 பேர் மீது வழக்கு
பஞ்சப்பள்ளி அருகே விசாரணைக்கு சென்ற போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்து தகராறு செய்த இளம்பெண் உள்பட 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
2. 6ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்; 2 ஆசிரியர்கள் உள்பட 5 பேர் மீது வழக்கு
மராட்டியத்தில் 6ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில் 2 ஆசிரியர்கள் உள்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
3. வாழப்பாடி அருகே தடையை மீறி வங்காநரி ஜல்லிக்கட்டு 11 பேர் மீது வழக்கு
வாழப்பாடி அருகே தடையை மீறி வங்காநரி ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இது தொடர்பாக 11 பேர் மீது வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
4. புல்லட் ரெயில் திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து வழக்கு: மத்திய அரசுக்கு, சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்
புல்லட் ரெயில் திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், மத்திய அரசுக்கு, சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
5. ரத்து செய்யப்பட்ட ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய வேண்டும் - தேர்தல் கமிஷனிடம் தி.மு.க. மனு
ரத்து செய்யப்பட்ட ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வழக்கினை, சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என தேர்தல் கமிஷனிடம் தி.மு.க. மனு அளித்துள்ளது.