சினிமா செய்திகள்

ஜெயலலிதா வேடத்துக்கு நான் பொருத்தம் நடிகை நித்யாமேனன் மகிழ்ச்சி + "||" + For the role of Jayalalithaa I am fit Actress Nithyamanan is happy

ஜெயலலிதா வேடத்துக்கு நான் பொருத்தம் நடிகை நித்யாமேனன் மகிழ்ச்சி

ஜெயலலிதா வேடத்துக்கு நான் பொருத்தம் நடிகை நித்யாமேனன் மகிழ்ச்சி
ஜெயலலிதா வாழ்க்கை தலைவி என்ற பெயரிலும் த அயன் லேடி என்ற பெயரிலும் சினிமா படமாக தயாராகிறது. தலைவி படத்தில் கங்கனா ரணாவத் நடிக்கிறார்.
 த அயன் லேடி படத்தில் ஜெயலலிதாவாக நித்யா மேனன் நடிக்கிறார். இந்த படத்தில் நடிப்பது குறித்து நித்யா மேனன் அடிக்கடி பேசி வருகிறார். தற்போது அவர் அளித்துள்ள பேட்டி வருமாறு:-

“ஜெயலலிதாவுக்கும் எனக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. நாங்கள் இருவருமே பெங்களூருவில் படித்து இருக்கிறோம். பழக்க வழக்கம், பேசும் விதம், ஒழுக்கம், மேனரிசம் போன்ற விஷயங்களில் எல்லாம் ஜெயலலிதாவுக்கும் எனக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. இதனை இயக்குனர் பிரியதர்ஷினியும் என்னிடம் பலமுறை சொல்லி இருக்கிறார்.


ஜெயலலிதா மாதிரி நானும் பிடிக்காத விஷயங்களை பட்டென்று சொல்லி விடுவேன். ஜெயலலிதாவிடம் இருந்த நல்ல குணங்கள் என்னிடமும் இருக்கிறது. அதனால் ஜெயலலிதா சம்பந்தமான எல்லா விஷயங்களையும் கேட்டு தெரிந்து கொள்கிறேன். அவர் மாதிரியே நடிக்கவும் என்னை தயார் செய்து வருகிறேன்.

ஜெயலலிதா வேடத்துக்கு நான் பொருத்தமாக இருப்பேன். அந்த வேடத்தில் நடிக்க எனது 100 சதவீத உழைப்பை கொடுப்பேன்.”

இவ்வாறு நித்யா மேனன் கூறினார்.