சினிமா செய்திகள்

நடிகர் யோகிபாபுவுக்கு திருமணம்? + "||" + Marriage on actor Yogibabu?

நடிகர் யோகிபாபுவுக்கு திருமணம்?

நடிகர் யோகிபாபுவுக்கு திருமணம்?
யோகிபாபு சிறுசிறு வேடங்களில் நடித்து முன்னணி நகைச்சுவை நடிகராக உயர்ந்துள்ளார். தர்மபிரபு படத்தில் கதாநாயகனாக வந்தார். கோலமாவு கோகிலா படத்தில் நயன்தாராவுடன் டூயட் பாடி மேலும் பிரபலமானார்.
ரஜினிகாந்துடன் தர்பார் படத்தில் நடித்து வருகிறார். தற்போது அவர் கைவசம் 18 படங்கள் உள்ளன.

இந்த நிலையில் யோகிபாபுவுக்கு திருமணம் முடிவாகி விட்டதாக தகவல் பரவியது. யோகிபாபு முகநூல் பக்கத்தில் ஒரு பெண்ணுடன் இருப்பதுபோல் புகைப்படம் வெளியானது. அதில் ‘அவளும் நானும்’ என்ற வாசகம் இருந்தது. அந்த புகைப்படங்கள் வைரலானது.

அதை பார்த்த ரசிகர்கள் யோகிபாபு திருமணம் செய்து கொள்ளப்போகும் பெண் இவர்தான் என்று பேசினர். அதோடு யோகிபாபுக்கு பலரும் வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்தனர். உங்களுக்கு மனைவியாக வருபவர் அழகாக இருக்கிறார் என்றும் பதிவிட்டனர். செல்போனில் தொடர்பு கொண்டும் வாழ்த்தினார்கள்.

அது யோகிபாபு பெயரில் இயங்கும் போலி கணக்கு என்று பின்னர் தெரிய வந்தது. இந்த நிலையில் திருமணம் பற்றிய தகவலை யோகிபாபு மறுத்துள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில், “என் கல்யாணம் பற்றிய தவறான தகவல் பரவி வருகிறது. அது வெறும் வதந்தியே. எனது கல்யாணம் முடிவானதும் நானே அனைவருக்கும் முறையாக அறிவிப்பேன். நன்றி” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. தந்தை, மகனாக நடிக்கிறார் ; 2 வேடங்களில் யோகிபாபு
தமிழ் பட உலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக உயர்ந்துள்ள யோகிபாபு அனைத்து பெரிய கதாநாயகர்கள் படங்களிலும் நடித்து விட்டார். ரஜினியுடன் நடித்துள்ள தர்பார் படம் இன்று திரைக்கு வருகிறது.
2. வடிவேலுக்கு போட்டியாக யோகிபாபு?
இம்சை அரசன்-2 படத்தில் நடிக்க மறுத்த வடிவேலுக்கு தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்ததால் 2 வருடங்களாக புதிய படங்களில் அவர் நடிக்கவில்லை. இதனால் நிறைய பட வாய்ப்புகளை இழந்தார். இந்த இடைவெளியை யோகிபாபு பயன்படுத்திக்கொண்டார்.
3. யோகிபாபு படத்துக்கு எதிர்ப்பு
ஜெயம் ரவியின் ‘கோமாளி’ படத்தில் ரஜினிகாந்துக்கு எதிரான வசனங்கள் இருப்பதாக ஏற்கனவே எதிர்ப்பு கிளம்பியது.