சினிமா செய்திகள்

தீபிகா படுகோனே - அலியாபட் மோதல் + "||" + Deepika Padukone - alia bhatt crush

தீபிகா படுகோனே - அலியாபட் மோதல்

தீபிகா படுகோனே - அலியாபட் மோதல்
மும்பையில் நடந்த திரைப்பட நேர்காணல் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்க கணவர் ரன்வீர் சிங்குடன் தீபிகா படுகோனே சென்று இருந்தார். இதில் விஜய் தேவரகொண்டா, அலியாபட் உள்பட மேலும் சில நட்சத்திரங்கள் பங்கேற்றனர்.
தீபிகா படுகோனேவும், ரன்பீர் கபூரும் ஏற்கனவே காதலித்தனர். ஜோடியாகவும் சுற்றினார்கள். திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் கூறி இருந்தனர். 

காதல் நினைவாக ஆர்.கே என்ற இன்ஷியலையும் கழுத்துக்கு கீழே தீபிகா படுகோனே பச்சை குத்தி இருந்தார். அதன்பிறகு இந்த காதல் முறிந்தது. பின்னர் மன அழுத்தத்துக்கு ஆளாகி சிகிச்சை பெற்று பிறகு ரன்வீர் சிங்கை காதலித்து திருமணமும் செய்து கொண்டார்.

இந்த நிலையில் டி.வி. நேர்காணலில் தீபிகா படுகோனே கூறும்போது, “ரன்பீர் கபூரை காதலித்தேன். ஆனால் ரன்வீர் சிங்கை திருமணம் செய்து கொண்டேன். அதேமாதிரி ரன்பீர் கபூர் என்னை காதலித்து இப்போது அலியாபட்டை மணக்க போகிறார் என்று கூறினார். இது அலியாபட்டுக்கு கோபத்தை ஏற்படுத்தியது.

அதை ஏன் இப்போது இங்கே சொல்கிறீர்கள் என்று தீபிகா படுகோனேவை பார்த்து கோபமாக கேட்டார். ரன்வீர் சிங்குக்கும் தீபிகா படுகோனே பேசியது பிடிக்கவில்லை. இது மும்பை பட உலகிலும், ரசிகர்கள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. தீபிகா படுகோனேவின் மத்திய அரசு விளம்பர படம் நிறுத்தம்?
டெல்லியில் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு நடிகை தீபிகா படுகோனே எதிர்ப்பு தெரிவித்ததுடன் பல்கலைக்கழகத்துக்கே நேரில் சென்று மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் கலந்து கொண்டார்.
2. மாணவர்கள் போராட்டத்தில் பங்கேற்ற தீபிகா படுகோனே படத்துக்கு எதிர்ப்பு
டெல்லியில் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு டாப்சி, கியூமா குரோசி, சுவரா பாஸ்கர், தியா மிர்சா, சோனம் கபூர், அலியா பட், சோனாக்சி சின்ஹா உள்ளிட்ட பல நடிகைகள் கண்டனம் தெரிவித்தனர்.
3. நடிகை தீபிகா படுகோனேக்கு பா.ஜனதா கண்டனம்
ஜே.என்.யு. மாணவர்கள் போராட்டத்தில் பங்கேற்ற நடிகை தீபிகா படுகோனேக்கு பாரதீய ஜனதா கண்டனம் தெரிவித்துள்ளது.
4. தீபிகா படுகோனேவை உலுக்கிய கதாபாத்திரம்
டெல்லியை சேர்ந்த லட்சுமி அகர்வால் என்ற பெண்ணை குட்டா என்பவர் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தினார். அதற்கு லட்சுமி அகர்வால் மறுத்ததால் அவர் முகத்தில் திராவகம் வீசினார்.