சினிமா செய்திகள்

2020-ல் நந்திதா ஸ்வேதாவுடன், ‘கபடதாரி’ + "||" + In 2020 kapadathari

2020-ல் நந்திதா ஸ்வேதாவுடன், ‘கபடதாரி’

2020-ல் நந்திதா ஸ்வேதாவுடன், ‘கபடதாரி’
‘கபடதாரி’ படத்தின் கதைநாயகனாக சிபிராஜ் நடிக்க, அவருக்கு ஜோடியாக நந்திதா ஸ்வேதா நடிக்கிறார்.
பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கும் ‘கபடதாரி’ படத்தை லலிதா தனஞ்செயன் தயாரிக்கிறார். கதைநாயகனாக சிபிராஜ் நடிக்க, அவருக்கு ஜோடியாக நந்திதா ஸ்வேதா நடிக்கிறார். பூஜாகுமார், நாசர், ஜெயப்பிரகாஷ், ஜே.சதீஷ்குமார், தீனா ஆகியோரும் நடிக்கிறார்கள். எம்.ஹேமந்த்ராவ் எழுதிய கதைக்கு திரைக்கதை-வசனத்தை ஜான் மகேந்திரன், ஜி.தனஞ்செயன் ஆகிய இருவரும் எழுதியிருக்கிறார்கள். சைமன் கே.கிங் இசையமைக்கிறார்.

கடந்த 1-ந் தேதி தொடங்கிய படப்பிடிப்பு ஒரே கட்டமாக நடைபெற்று 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை நடைபெற இருக்கிறது.