சினிமா செய்திகள்

அடுத்த மாதம் 30 படங்கள் ரிலீஸ் + "||" + 30 movies release next month

அடுத்த மாதம் 30 படங்கள் ரிலீஸ்

அடுத்த மாதம் 30 படங்கள் ரிலீஸ்
ஆண்டு இறுதி என்பதால் பெரிய மற்றும் சிறுபட்ஜெட்டில் தயாரான 30-க்கும் மேற்பட்ட படங்களை அடுத்த மாதம் திரைக்கு கொண்டு வருகிறார்கள்.
பா.ரஞ்சித் தயாரித்து தினேஷ்-ஆனந்தி நடித்துள்ள இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு, தனுசு ராசி நேயர்களே, சுந்தர்.சி இயக்கி நடித்துள்ள பேய் படமான இருட்டு, ஜடா ஆகிய படங்கள் டிசம்பர் 6-ந்தேதி வருகின்றன.

பரத் நடித்துள்ள காளிதாஸ் 13-ந்தேதியும் நிசப்தம் 16-ந்தேதியும் வருகிறது. நிசப்தம் படத்தில் மாதவன்-அனுஷ்கா நடித்துள்ளனர். சுசீந்திரன் இயக்கி உள்ள சாம்பியன் 17-ந்தேதி வருகிறது. ஜீ.வி.பிரகாஷ் நடித்துள்ள ஆயிரம் ஜென்மங்கள், ஜீவாவின் சீறு, விமலின் கன்னிராசி, சிவகார்த்திகேயனின் ஹீரோ, கார்த்தியின் தம்பி ஆகிய படங்கள் 20-ந்தேதி வருகின்றன.

ஹீரோ படத்தில் சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோவாக வருகிறார். தம்பி படத்தில் ஜோதிகா அக்காவாகவும் கார்த்தி தம்பியாகவும் நடித்துள்ளனர். தம்பி படத்தின் தமிழ்நாடு தியேட்டர் உரிமையை வாங்கி இருப்பதாக ‘எஸ்டிசி’ பிக்சர்ஸ் அறிவித்துள்ளது. இதே நிறுவனம் திரிஷாவின் கர்ஜனை படத்தின் உரிமையையும் வாங்கி டிசம்பரில் திரைக்கு கொண்டு வர ஆலோசிக்கிறது.

அமலாபாலின் அதோ அந்த பறவைபோல டிசம்பர் 27-ந்தேதி வெளியாகிறது. சசிகுமாரின் நாடோடிகள்-2, எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கி உள்ள கேப்மாரி, பாரதிராஜா, வசந்த் ரவி நடித்துள்ள ராக்கி, அல்டி, வேழம், சைக்கோ, உன் காதல் இருந்தால், நான் அவளை சந்தித்தபோது, கருத்துக்களை பதிவு செய், பஞ்சாட்சரம், தேடு, இருளன், மதம், இ.பி.கோ 306, கொம்பு வச்ச சிங்கம்டா, அவனே ஸ்ரீமன் நாராயணா ஆகிய படங்களும் அடுத்த மாதம் திரைக்கு வருகின்றன.