சினிமா செய்திகள்

நடிகை திரிஷாவுடன் மோதலா? ஹன்சிகா விளக்கம் + "||" + Conflict with actress Trisha? Hansika Description

நடிகை திரிஷாவுடன் மோதலா? ஹன்சிகா விளக்கம்

நடிகை திரிஷாவுடன் மோதலா? ஹன்சிகா விளக்கம்
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார் ஹன்சிகா, சமூக சேவை பணிகளையும் செய்கிறார். அவர் அளித்த பேட்டி வருமாறு:-
நடிப்பு இயல்பாக வரவேண்டும். அதை கஷ்டப்பட்டு செய்ய கூடாது. நடிப்பு எனது ரத்தத்தில் இருக்கிறது என்று நினைக்கிறேன். நடிப்பை தவிர வேறு எந்த தொழிலும் தெரியாது. நேரத்தின் அருமையை அறிவேன். அதனால் டைம் பாம் என்று என்னை அழைப்பார்கள். திரிஷாவுக்கும் எனக்கும் பிரச்சினை, மோதல் இருக்கிறது என்றெல்லாம் செய்திகள் வருகின்றன.

அதில் உண்மை இல்லை. எங்களுக்குள் எந்த பிரச்சினையும் இல்லை. நாங்கள் இருவரும் நல்ல சினேகிதிகள். சேர்ந்து படத்தில் நடித்து இருக்கிறோம். இன்னொரு கதாநாயகியுடன் சேர்ந்து நடிப்பதில் எனக்கு ஆட்சேபனை இல்லை. கதைக்கு தேவை என்றால் இரண்டு கதாநாயகிகள் இருப்பார்கள்.

நான் முதல் நாயகியா? இரண்டாவது நாயகியா? என்றெல்லாம் பார்க்க மாட்டேன். எனது கதாபாத்திரத்துக்கு கதையில் எந்த அளவு முக்கியத்துவம் இருக்கிறது என்றுதான் யோசிப்பேன். ரசிகர்கள் என்னை சின்ன குஷ்பு என்று அழைக்கின்றனர். மதுரையில் கோவிலும் கட்டினார்கள்.

நல்ல வேலையை செய்யுங்கள் என்று அவர்களுக்கு அறிவுரை கூறினேன். நான் பேய் படங்களில் நடித்துள்ளேன். எனக்கு பேய் என்றால் பயம். சுற்றுப்பயணம் பிடிக்கும். உழைக்கிறவர்களுக்கு பலன் கிடைக்கும். நான் நடிப்பில் 100 சதவீத உழைப்பை கொடுப்பதே வெற்றியின் ரகசியம்.”

இவ்வாறு ஹன்சிகா கூறினார்.