சென்னையில் நடிகர் ரஜினிகாந்துடன், கேரளாவை சேர்ந்த மாற்றுத்திறனாளி இளைஞர் பிரணவ் சந்திப்பு.


சென்னையில் நடிகர் ரஜினிகாந்துடன், கேரளாவை சேர்ந்த மாற்றுத்திறனாளி இளைஞர் பிரணவ் சந்திப்பு.
x
தினத்தந்தி 2 Dec 2019 8:21 PM IST (Updated: 2 Dec 2019 8:21 PM IST)
t-max-icont-min-icon

கேரள மாநிலத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி ஓவியர் பிரணவ், சென்னையில் ரஜினியை சந்தித்து அவரை நெகிழ வைத்திருக்கிறார்.

சென்னை,

கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் ஆலத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரணவ். பிறவியிலேயே கைகளை இழந்த பிரணவ், தன்னம்பிக்கையால் தனது வாழ்க்கையில் வீறு நடைபோட்டு வருகிறார். பட்டப்படிப்பை முடித்த இவர், ஓவியம் வரைவதிலும் சிறந்து விளங்கி வருகிறார்.

சமீபத்தில் கேரளப் பேரிடர் நிவாரண நிதிக்காக, தனது பங்கை முதல்வர் பினராயி விஜயனைச் சந்தித்துக் கொடுத்தார் பிரணவ். அப்போது, பினராயி விஜயனுடன், பிரணவ் எடுத்த செல்பி நாடு முழுவதும் வைரலானது.  

இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்தை பிரணவ் சந்தித்திருக்கிறார். சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் மாலை 5.30 மணியளவில் தனது பெற்றோர் மற்றும் சகோதரருடன் ரஜினியை நேரில் சந்தித்திருக்கிறார் பிரணவ்.  அப்போது ரஜினிக்காக தான் வரைந்து வைத்திருந்த ஓவியத்தை பிரணவ் வழங்கினார். பின்னர் ரஜினியுடன் செல்பி ஒன்றையும் பிரணவ் எடுத்துக் கொண்டார்.

Next Story