என் வீட்டை விற்றதாக வதந்தி - ரகுல்பிரீத் சிங் வருத்தம்
தன் வீட்டை விற்றதாக வதந்தி பரப்புவதாக நடிகை ரகுல்பிரீத் சிங் வருத்தம் தெரிவித்துள்ளார்.
தமிழில் தடையற தாக்க படத்தில் அறிமுகமான ரகுல்பிரீத் சிங், புத்தகம், என்னமோ ஏதோ படங்களில் நடித்தார். 2 வருட இடைவெளிக்கு பிறகு கார்த்தி ஜோடியாக நடித்த தீரன் அதிகாரம் ஒன்று திருப்புமுனையை ஏற்படுத்த பட வாய்ப்புகள் குவிந்தன. மீண்டும் கார்த்தியுடன் தேவ், சூர்யாவுடன் என்.ஜி.கே படங்களில் நடித்தார்.
சிவகார்த்திகேயனுடன் புதிய படத்தில் நடிக்கிறார். கமல்ஹாசனுடன் இந்தியன்-2 படத்திலும் நடிக்கிறார். தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார். இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு ஐதராபாத்தில் ரகுல்பிரீத் சிங் புதிய வீடு வாங்கியதாக செய்திகள் வந்தன. தற்போது அந்த வீட்டை விற்றுவிட்டு பெங்களூருவில் அதிக விலைக்கு புதிய வீடு ஒன்றை வாங்கி இருப்பதாக தகவல் வெளியானது. இதனை சமூக வலைத்தளத்தில் பலரும் பகிர்ந்தனர். இதற்கு டுவிட்டரில் ரகுல்பிரீத் சிங் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறும்போது, “இப்படிப்பட்ட தவறான செய்திகள் எங்கிருந்து கிடைக்கின்றன. அதற்கான ஆதாரங்கள் என்ன என்பது வியப்பாக உள்ளது. நான் ஐதராபாத்தில் வீடு வாங்கியபோது அதனை யாரோ எனக்கு பரிசாக கொடுத்ததாக கூறினார்கள். தற்போது நான் பெங்களூருவில் புதிய வீடு வாங்குவதற்காக ஐதராபாத் வீட்டை விற்று விட்டேன் என்கிறார்கள் தயவு செய்து கற்பனையாக கூறுவதை நிறுத்தி விட்டு உண்மையை சொல்லுங்கள்” என்றார்.
Related Tags :
Next Story