சினிமா செய்திகள்

ரஜினிகாந்துடனான சந்திப்பு : நான் கனவிலும் எதிர்பார்க்கவில்லை - பிரணவ் நெகிழ்ச்சி + "||" + Meeting with Rajinikanth: I never expected to dream Pranav elasticity

ரஜினிகாந்துடனான சந்திப்பு : நான் கனவிலும் எதிர்பார்க்கவில்லை - பிரணவ் நெகிழ்ச்சி

ரஜினிகாந்துடனான சந்திப்பு : நான் கனவிலும் எதிர்பார்க்கவில்லை - பிரணவ் நெகிழ்ச்சி
'ரஜினிகாந்துடனான சந்திப்பு' இப்படியெல்லாம் நடக்கும் என்று நான் கனவிலும் எதிர்பார்க்கவில்லை என மாற்றுத்திறனாளி இளைஞர் பிரணவ் கூறி உள்ளார்.
சென்னை,

கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து, பேரிடர் நிவாரண நிதி வழங்கிய மாற்றுத்திறனாளி இளைஞர் பிரணவ், அவருடன் செல்பி எடுத்ததன் மூலம் பிரபலமானார்.

ரஜினியை சந்திக்க ஆசைப்படுவதாக பிரணவ் தகவல் வெளியிட்டு இருந்தார். இதை தொடர்ந்து ரஜினிகாந்தை, பிரணவ் சந்திக்க கராத்தே தியாகராஜன் ஏற்பாடு செய்தார். 

நேற்று மாலை 5.30 மணியளவில் ரஜினியை, அவரது வீட்டில் பிரணவ் சந்தித்தார். இந்தச் சந்திப்பின் போது, ரஜினிக்கு தான் வரைந்த ஓவியத்தைப் பரிசாக வழங்கினார் பிரணவ்.

பிரணவின் காலை, தனது கையால் பிடித்துக் குலுக்கி, கட்டிப்பிடித்தார் ரஜினி. சுமார் 20 நிமிடங்கள் நடந்த இந்தச் சந்திப்பில் தனது லட்சியம், கனவு, குடும்பம் போன்றவை தொடர்பாகவும் ரஜினியிடம் பேசினார் பிரணவ். 

இதுகுறித்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ள பிரணவ்,  வாழ்க்கையின் மிகவும் மகிழ்ச்சியான ஒரு தருணத்தில் இருக்கிறேன். உலகத்தின் ஒரே சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்தை சந்தித்துள்ளேன். எனக்கு பொன்னாடை போர்த்தினார். என் காலைப்பிடித்து குலுக்கினார், கட்டிப்பிடித்தார், செல்பி எடுத்தார், எனக்கு எப்போதும் துணையாக இருப்பேன் என்றார். இப்படியெல்லாம் நடக்கும் என்று நான் கனவிலும் எதிர்பார்க்கவில்லை என பிரணவ் கூறி உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. 2021ம் ஆண்டிலும் அதிமுக ஆட்சி தொடரும் என்பதையே அதிசயம் நிகழும் என ரஜினி கூறியிருப்பார் - முதலமைச்சர் பழனிசாமி
2021ம் ஆண்டிலும் அதிமுக ஆட்சி தொடரும் என்பதைத்தான் அதிசயம் நிகழும் என ரஜினி கூறியிருப்பார் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
2. அதிசயம், அதிர்ஷ்டத்தை ரஜினி நம்பலாம்; ஆனால் நாங்கள் மக்களை, வாக்காளர்களை மட்டுமே நம்புகிறோம் - அமைச்சர் ஜெயக்குமார்
அதிசயம், அதிர்ஷ்டத்தை ரஜினி நம்பலாம். ஆனால் நாங்கள் மக்களை, வாக்காளர்களை மட்டுமே நம்புகிறோம் என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
3. வருகிற சட்டமன்ற தேர்தலில் ரஜினிகாந்தும் - கமல்ஹாசனும் இணைந்து போட்டியிட திட்டமா?
வருகிற சட்டமன்ற தேர்தலில் ரஜினிகாந்தும் - கமல்ஹாசனும் இணைந்து போட்டியிட திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
4. அரசியல் தெரியுமா? ரஜினிகாந்த், கமல்ஹாசன் மீது எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு
அரசியல் தெரியுமா? என்று ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.
5. நடிகர் அதர்வா ரூ.6 கோடி மோசடி செய்ததாக போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார்
நடிகர் அதர்வா ரூ.6 கோடி மோசடி செய்ததாக திரைப்பட விநியோகஸ்தர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.