சினிமா செய்திகள்

புதிய படத்தில் ரஜினிக்கு ஜோடியா? - நடிகை மீனா விளக்கம் + "||" + Pair with Rajinikanth in new film? - Description of actress Meena

புதிய படத்தில் ரஜினிக்கு ஜோடியா? - நடிகை மீனா விளக்கம்

புதிய படத்தில் ரஜினிக்கு ஜோடியா? - நடிகை மீனா விளக்கம்
புதிய படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக வெளியாக தகவல் குறித்து நடிகை மீனா விளக்கம் அளித்துள்ளார்..
தமிழ் பட உலகில் முன்னணி நடிகையாக இருந்த மீனா முதல் முறையாக கரோலின் காமாட்சி என்ற வெப் தொடரில் நடித்துள்ளார். இதில் ஜார்ஜியா, அன்ட்ரியானா, ஒய்.ஜி.மகேந்திரன், திலீபன், அண்டோ தாமஸ் ஆகியோரும் நடித்துள்ளனர். விவேக் குமார் கண்ணன் இயக்கி உள்ளார். சிதம்பரம் தயாரித்துள்ளார்.


வெப் தொடரில் நடிப்பது குறித்து மீனா அளித்த பேட்டி வருமாறு:-

“கரோலின் காமாட்சி வெப் தொடர் கதை பிடித்து இருந்ததால் நடிக்க ஒப்புக்கொண்டேன். இதில் சி.பி.ஐ. அதிகாரியாக வருகிறேன். எனது கதாபாத்திரம் வித்தியாசமாக இருக்கும். அனைத்து ரசிகர்களுக்கும் பிடிக்கும். நான் தமிழ் படங்களில் நீண்ட காலம் நடிக்காததால் சினிமா வேண்டாம் என்று ஒதுங்கி விட்டதாக சொல்வது தவறு.

தமிழில் பிடித்த கதை மற்றும் கதாபாத்திரங்கள் அமையாததால் நடிக்கவில்லை. நல்ல கதை அமைந்தால் நடிப்பேன். மலையாள படங்களில் நடித்து வருகிறேன். தற்போது மம்முட்டி படத்தில் நடிக்கிறேன். ரஜினிகாந்தின் புதிய படத்தில் நான் நடிக்கிறேன் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன. அவருடன் நடிக்கிறேனா? என்பதை படக்குழுவினரிடம்தான் கேட்க வேண்டும். அவருடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் மகிழ்ச்சிதான்.

அரசியலுக்கு வரும்படி நிறைய கட்சிகளிடம் இருந்து அழைப்புகள் வருகின்றன. ஆனால் எனக்கு விருப்பம் இல்லை. எதிர்காலத்தில் அரசியலுக்கு வருவேனா என்பதை இப்போது சொல்ல முடியாது. ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் அரசியலுக்கு வந்துள்ளனர். என்ன அதிசயம் நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.” இவ்வாறு மீனா கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்த அரியலூர் காதல் ஜோடி தர்ணா
ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்த அரியலூர் காதல் ஜோடி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
2. புதிய படத்தில் பார்த்திபன், சிம்பு?
புதிய படத்தில் பார்த்திபன், சிம்பு ஆகியோர் நடிக்க உள்ளார்களா என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
3. ‘சின்னத்திரை’ நாயகிக்கு அடித்த அதிர்ஷ்டம்: விக்ரம் பிரபுவுடன் ஜோடி சேருகிறார், வாணிபோஜன்!
‘சின்னத்திரை’ நாயகியான வாணிபோஜன், விக்ரம் பிரபுவுடன் ஜோடி சேர உள்ளார்.