`டம்மி ஜோக்கர்'க்காக பேய் பங்களாவுக்குள் புதையலை தேடும் கும்பல்
பேய் பங்களாவுக்குள் போய் புதையலை தேடும் ஒரு கும்பல் பற்றிய படம், `டம்மி ஜோக்கர்' என்ற பெயரில் தயாராகி வருகிறது.
`டம்மி ஜோக்கர்' படத்தின் கதைநாயகனாக நடிப்பதுடன், படத்தை தயாரிப்பவர், செந்தில்குமார். இவருடன் புதுமுகங்கள் பலர் நடிக்கிறார்கள். வினோ நாகராஜன் கதை-திரைக்கதை, வசனம் எழுதியிருக்கிறார்.
வினோ நாகராஜன், என்.கல்யாணசுந்தரம் ஆகிய இருவரும் இணைந்து இந்த படத்தை டைரக்டு செய்கிறார்கள். `டம்மி ஜோக்கர்' படத்தை பற்றி இவர்கள் கூறுகிறார்கள்:-
``22 வருடங்களுக்கு முன், காணாமல் போன தன் தந்தையை தேடி ஒரு கிராமத்துக்கு வருகிறார், ஒரு இளைஞர். அவருக்கு அந்த ஊரை சேர்ந்த கதாநாயகனும், நண்பர்களும் உதவுகிறார்கள். ஊர் முழுவதும் விசாரிக்கும்போது, எல்லோருமே அந்த பேய் பங்களாவை காட்டுகிறார்கள். அந்த பேய் பங்களாவுக்குள்தான் இளைஞனின் தந்தை போனார் என்றும், அங்கு தங்க புதையல் இருப்பதாகவும் கூறுகிறார்கள்.
புதையல் நமக்கு அப்பா அந்த இளைஞருக்கு என்று கணக்கு போட்டு கதாநாயகனும், நண்பர்களும் பேய் பங்களாவுக்குள் போகிறார்கள். இவர்கள் உள்ளே நுழைந்ததும், கதவு தானாகவே மூடிக்கொள்கிறது. எவ்வளவோ முயன்றும் அவர்களால் கதவை திறக்க முடியவில்லை. அவர்களுக்குள் திகில் ஏற்படுகிறது.
இளைஞரின் தந்தையை அவர் கண்டுபிடித்தாரா? புதையல் கிடைத்ததா? இப்படி திகிலாக செல்லும் கதை, ஒரு கட்டத்தில் நகைச்சுவைக்கு மாறுகிறது. 22 பிரபல நடிகர்கள் போல் உருவ ஒற்றுமை உள்ளவர்களை இதில் நடிக்க வைத்துள்ளோம். காரைக்குடியிலும், அதன் சுற்றுப்புறங்களிலும் படப்பிடிப்பை நடத்தி இருக்கிறோம்.''
Related Tags :
Next Story