என்னிடம் தவறாக நடக்க முயன்றனர் - நடிகை நித்யா மேனன்


என்னிடம் தவறாக நடக்க முயன்றனர் - நடிகை நித்யா மேனன்
x
தினத்தந்தி 6 Dec 2019 5:17 AM IST (Updated: 6 Dec 2019 5:17 AM IST)
t-max-icont-min-icon

தமிழ், மலையாள பட உலகில் முன்னணி நடிகையாக இருக்கும் நித்யா மேனன் அடுத்து ஜெயலலிதா வாழ்க்கை கதையான த அயன்லேடி படத்தில் நடிக்கிறார்.

இந்த படத்தில் ஜெயலலிதா வேடத்தில் நடிப்பதற்காக விசேஷ பயிற்சிகள் எடுத்து வருகிறார். அவர் கூறியதாவது:-

“நான் எதிர்பாராமல் சினிமாவில் அறிமுகமானேன். ஒன்றிரண்டு படங்களில் நடித்து விட்டு போய் விடலாம் என்று நினைத்தேன். ஆனால் அதன் மீது விருப்பம் அதிகமாகி திரை பயணத்தை தொடர வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது. சினிமா துறையில் பெண்களுக்கு பாதுகாப்பு குறைவாக உள்ளது என்பது சரியல்ல.

எல்லா துறைகளிலுமே பாதுகாப்பின்மை இருக்கிறது. என் வாழ்க்கையில் பாதுகாப்பு இல்லை என்ற உணர்வு ஏற்பட்டது இல்லை. சிலர் என்னிடம் ஆபாசமாக பேசி தவறாக நடக்க முயற்சி செய்தனர். நான் விட்டு கொடுக்கவில்லை. பெண்களிடம் கவுரவமாக நடக்க கற்றுக்கொள் என்று கடுமையாக சொன்னேன்.

என்ன தவறு நடந்தாலும் அதை எதிர்ப்பதில் நமது பங்கும் இருக்க வேண்டும். அப்போதுதான் மற்றவர்கள் தலையிடுவார்கள். எவ்வளவு கஷ்டம் வந்தாலும் முளையிலேயே கிள்ளி எறிந்து விட வேண்டும். நமது முடிவை கொஞ்சமும் தயங்காமல் தைரியமாக முகத்தில் அறைந்த மாதிரி சொல்ல வேண்டும். தைரியமாக இருந்தாலே பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும்.” இவ்வாறு நித்யா மேனன் கூறினார்.

Next Story