தேசிய செய்திகள்

28 நாள் சிகிச்சைக்கு பிறகு ஆஸ்பத்திரியில் இருந்து லதா மங்கேஷ்கர் வீடு திரும்பினார் + "||" + Lata Mangeshkar returned home from the hospital after 28 days of treatment

28 நாள் சிகிச்சைக்கு பிறகு ஆஸ்பத்திரியில் இருந்து லதா மங்கேஷ்கர் வீடு திரும்பினார்

28 நாள் சிகிச்சைக்கு பிறகு ஆஸ்பத்திரியில் இருந்து லதா மங்கேஷ்கர் வீடு திரும்பினார்
பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் 28 நாள் சிகிச்சைக்கு பிறகு ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பினார்.
மும்பை,

பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர். 90 வயதான இவர், கடந்த மாதம் உடல்நிலை பாதிக்கப்பட்டு மும்பை பிரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வந்தனர். இந்தநிலையில் உடல்நலம் தேறியதை அடுத்து, நேற்று அவர் ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பினார்.


இது குறித்து அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

நான் கடந்த 28 நாட்களாக பிரீச் கேண்டி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தேன். எனக்கு நிமோனியா பாதிப்பு இருப்பது டாக்டர்களின் பரிசோதனையில் தெரியவந்தது. டாக்டர்கள் முழுமையாக குணமடைந்தவுடன் வீட்டுக்கு செல்லுமாறு அறிவுறுத்தினர். இன்று(நேற்று), கடவுளின் ஆசீர்வாதங்களுடன் வீடு திரும்பி உள்ளேன்.

நான் குணம் அடைய வேண்டிய எல்லா நலம் விரும்பிகளுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். உங்கள் பிரார்த்தனைகளும், வாழ்த்துகளும் பலன் அளித்துள்ளன. உங்கள் ஒவ்வொருவரையும் தாழ்மையுடன் தலை வணங்குகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

லதா மங்கேஷ்கர் சுமார் இருபதுக்கும் மேற்பட்ட மொழிகளில் பாடல் பாடியுள்ளார். இந்தியாவின் மிக உயரிய விருதான ‘பாரத ரத்னா’, ‘தாதாசாகேப் பால்கே’ உள்ளிட்ட பல விருதுகளை பெற்று உள்ளார்.

தன்னுடைய 4 வயதிலேயே பாடத்தொடங்கி, இப்போது வரை சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி, இந்திய திரையுலகில் மிகச்சிறந்த பின்னணி பாடகியாக விளங்குகிறார்.


தொடர்புடைய செய்திகள்

1. ஈரானில் ஆஸ்பத்திரியில் கியாஸ் சிலிண்டர் வெடித்து தீ விபத்து; 19 பேர் உடல் கருகி சாவு
ஈரானில் ஆஸ்பத்திரியில் கியாஸ் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 19 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
2. ஜிப்மர் ஆஸ்பத்திரியில் புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு தொடங்கியது நோயாளிகளின் உறவினர்களுக்கு அனுமதி மறுப்பு
ஜிப்மர் ஆஸ்பத்திரியில் புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு தொடங்கியது. நோயாளிகளுடன் வந்த உறவினர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
3. கேரளாவில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றவர் சாவு - கொரோனா வைரசால் இறந்தாரா?
கேரளாவில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றவர், கொரோனா வைரசால் இறந்தாரா என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
4. சிரியாவில் பள்ளிக்கூடங்கள், ஆஸ்பத்திரி மீது வான்தாக்குதல்: 9 சிறுவர்கள் உள்பட 20 பேர் பலி
சிரியாவில் பள்ளிக்கூடங்கள் மற்றும் ஆஸ்பத்திரி மீது நடத்தப்பட்ட வான்தாக்குதலில், 9 சிறுவர்கள் உள்பட 20 பேர் பலியாயினர்.
5. மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அமையும் இடத்தில் ஜப்பான் நிதிக் குழுவினர் ஆய்வு
மதுரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அமையும் இடத்தில் நேற்று ஜப்பான் நிதிக்குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர். அடிக்கல் நாட்டி ஒரு ஆண்டுக்கு மேலாகியும் எப்போது கட்டுமானப்பணி தொடங்கும் என்று தெரியாத நிலையே நீடிக்கிறது.