மோசமான படம் எடுப்பதை தவிருங்கள்-ராதிகா ஆப்தே


மோசமான படம் எடுப்பதை தவிருங்கள்-ராதிகா ஆப்தே
x
தினத்தந்தி 9 Dec 2019 5:26 AM IST (Updated: 9 Dec 2019 5:26 AM IST)
t-max-icont-min-icon

தமிழில் வெற்றிச்செல்வன், ஆல் இன் ஆல் அழகுராஜா படங்களில் நடித்துள்ள ராதிகா ஆப்தே கபாலி படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக வந்தார். டோனி படத்திலும் நடித்துள்ளார்.

இந்த படங்களில் குடும்ப பாங்கான தோற்றங்களில் நடித்து இருக்கிறார். ஆனால் சில இந்தி, ஆங்கில படங்களில் நிர்வாணமாக நடித்தும் படுக்கை அறை காட்சிகளில் நெருக்கமாக நடித்தும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதனால் அவருக்கு விலை மாதுவாகவும் கற்பழிக்கப்பட்ட பெண் வேடங்களில் நடிக்கவும் வாய்ப்புகள் வருகின்றன. இதுகுறித்து ராதிகா ஆப்தே கூறியதாவது:-

“ஏற்கனவே கதைக்கு தேவை என்பதால் அரைகுறை ஆடையில் நடித்தேன். பட்லாபூர் என்ற படத்தில் கவர்ச்சியாக நடித்து இருந்தேன். ஆபத்தில் சிக்கும் கணவரை காப்பாற்ற துடிக்கும் கதாபாத்திரம் என்பதால் அதுபோல் நடிக்க வேண்டி இருந்தது. அந்த வேடத்தில் துணிச்சலாக நடித்ததால் ஆபாச கதையம்சம் உள்ள படங்களில் நடிக்க எனக்கு நிறைய வாய்ப்புகள் வருகின்றன.

ஆனால் அவர்கள் சொன்ன கதை மற்றும் கதாபாத்திரத்துக்கு கவர்ச்சி தேவை இல்லை. எனவே அந்த படங்களில் நடிக்க நான் மறுத்து விட்டேன். முற்போக்கு சிந்தனை என்ற பெயரில் எல்லை மீறி மோசமான ஆபாச படங்கள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். அதில் நடிக்க நான் விரும்பவில்லை.” இவ்வாறு ராதிகா ஆப்தே கூறினார்.

Next Story