நடிகர் பாலா விவாகரத்து
தமிழில் அன்பு படத்தில் அறிமுகமாகி காதல் கிசு, கலிங்கா, அம்மா அப்பா செல்லம் உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளவர் பாலா.
வீரம் படத்தில் அஜித்குமாரின் தம்பியாக நடித்து இருந்தார். இவரது அண்ணன்தான் வீரம் படத்தை இயக்கிய சிவா என்பது குறிப்பிடத்தக்கது. மலையாள பட உலகிலும் பாலா முன்னணி நடிகராக இருக்கிறார். மோகன்லாலின் லூசிபர் படத்திலும் நடித்து இருந்தார். பாலாவும் கேரளாவை சேர்ந்த பிரபல பின்னணி பாடகி அம்ருதாவும் காதலித்தனர். 2010-ல் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு அவந்திகா என்ற பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் பாலாவுக்கும் அம்ருதாவுக்கும் திடீர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2015-ல் பிரிந்து தனித்தனியாக வசித்தனர். இதுகுறித்து கிசுகிசு வெளியானபோது எங்கள் குடும்ப வாழ்க்கை குறித்து யாரும் பேசவேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்தனர். பின்னர் கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள குடும்ப நல கோர்ட்டில் விவாகரத்து கேட்டு பாலா வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் இருவரையும் அழைத்து நீதிபதி விசாரித்தார். தற்போது அவர்களுக்கு விவாகரத்து வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. மகள் அவந்திகா தாயுடன் வளர்வார் என்று கூறப்படுகிறது. பாலா மனைவியை விவாகரத்து செய்தது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story