சினிமா செய்திகள்

‘வலிமை’ படத்தில் அஜித் ஜோடி யாமி கவுதம்? + "||" + In the movie of valimai Ajith pair Yami Gautam

‘வலிமை’ படத்தில் அஜித் ஜோடி யாமி கவுதம்?

‘வலிமை’ படத்தில் அஜித் ஜோடி யாமி கவுதம்?
நேர்கொண்ட பார்வை படத்துக்கு பிறகு அஜித்குமார் ‘வலிமை’ படத்தில் நடிக்க தயாராகிறார். இந்த படத்தை வினோத் இயக்குகிறார். போனிகபூர் தயாரிக்கிறார்.
‘வலிமை’  அதிரடி சண்டை படமாக தயாராகிறது. இதில் அஜித்குமார் போலீஸ் அதிகாரி உள்பட இரு வேடங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது.

போலீஸ் அதிகாரி வேடத்துக்காக தனது தோற்றத்தை இளமையாக மாற்றி இருக்கிறார். மோட்டார் சைக்கிள் பந்தயம் மற்றும் கார்பந்தய காட்சிகள் இடம்பெறுகின்றன. கதாநாயகியாக நடிக்க நயன்தாரா, திரிஷா, தமன்னா, நஸ்ரியா ஆகியோர் பெயர்கள் அடிபட்டன. இந்த நிலையில் தற்போது யாமி கவுதமிடம் பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.


யாமி கவுதம் தமிழில் ஜெய்யுடன் தமிழ் செல்வனும் தனியார் அஞ்சலும் மற்றும் கவுரவம் படங்களில் நடித்து இருக்கிறார். இந்தி, தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்துள்ளார். வலிமை படப்பிடிப்பு வருகிற 13-ந்தேதி ஐதராபாத்தில் தொடங்குகிறது. இதற்காக அங்குள்ள ராமோஜிராவ் திரைப்பட நகரில் பிரமாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன.

தொடர்ச்சியாக ஒரு மாதம் அங்கு படப்பிடிப்பு நடக்கும் என்றும் பின்னர் படக்குழுவினர் வெளிநாடு செல்கிறார்கள் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.