சினிமா செய்திகள்

ரஜினிகாந்த் பிறந்தநாள் உலக அளவில் ட்ரெண்டாகி வருகிறது + "||" + Rajinikanth Birthday Worldwide trends

ரஜினிகாந்த் பிறந்தநாள் உலக அளவில் ட்ரெண்டாகி வருகிறது

ரஜினிகாந்த் பிறந்தநாள் உலக அளவில் ட்ரெண்டாகி வருகிறது
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாளையொட்டி ட்விட்டரில் ரஜினி ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டாகி வருகின்றன.
சென்னை

நடிகர் ரஜினிகாந்த் இன்று (வியாழக்கிழமை) தனது 70-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.   பிறந்த நாளான இன்று கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்தும், நலத்திட்ட உதவிகள் வழங்கியும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அதேபோல் சமூக வலைதளங்களில் அரசியல்வாதிகளும், சினிமா பிரபலங்களும்  தங்களது வாழ்த்துக்களை ரஜினிக்கு தெரிவித்து வருகின்றனர்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாளையொட்டி டிவிட்டரில் ரஜினி ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டாகி வருகின்றன. ரஜினி பிறந்த நாளுக்காக அதற்காக உருவாக்கப்பட்ட #HBDThalaivarSuperstarRAJINI என்ற ஹேஷ்டேக் உலக அளவில் ட்ரெண்டாக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் லட்சக்கணக்கானோர் தங்களது வாழ்த்துக்களையும், பிறந்த நாள் கொண்டாட்டங்களையும் பகிர்ந்துள்ளனர். அது போல்

#HappyBirthdaySuperstar(21.8K Tweets)#HBDThalaivarSuperstarRAJINI(301K Tweets)#HBDSuperstarRajinikanth(89.8K Tweets)#HappyBirthdayRajinikanth(43.1K Tweets)ஹேஷ்டேக்குகளும் ட்ரெண்டாக்கப்பட்டு வருகிறது.

ரஜினிகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு சென்னையை அடுத்த மணப்பாக்கத்தில் குறைந்த விலையில் சாப்பாடு வழங்கும் உழைப்பாளி உணவகம் திறக்கப்பட்டுள்ளது. ரஜினியின் ரசிகரும் சித்த மருத்துவருமான வீரபாபு இந்த உணவகத்தை தொடங்கியுள்ளார். உணவகத்தை சித்தாள் வேலை செய்யும் பெண் ஒருவர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இங்கு அளவு சாப்பாடு10 ரூபாய்க்கும் அளவில்லா சாப்பாடு 30 ரூபாக்கும் வழங்கப்படுகிறது.

பிறந்தநாளை முன்னிட்டு ரஜினி மக்கள் மன்றத்தின் தென்சென்னை (கிழக்கு) மாவட்ட தலைவர் சினோரா பி.எஸ்.அசோக் தலைமையில் சென்னை பட்டினப்பாக்கத்தில் நேற்று ரஜினிகாந்த் பிறந்தநாளையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

‘7ல் இருந்து 70’ வரை எனும் தலைப்பில் நடந்த இந்த நிகழ்ச்சியில், சமூக சேவகர்கள் பாலம் கல்யாணசுந்தரம், ஓடந்துறை சண்முகம், 2 ரூபாய் டாக்டர் ஹரிஹரன் ஆகியோரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் 7 மாத கர்ப்பிணி ஒருவருக்கு சீமந்தம் செய்யப்பட்டது. அவருக்கு பிறக்கப்போகும் குழந்தைக்கு முன்கூட்டியே தங்க மோதிரம், காப்பு வழங்கப்பட்டது. இஸ்லாமிய தம்பதியின் பெண் குழந்தைக்கு பரிதா என பெயர் சூட்டப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. அணுவை விட சிறியது, அணுகுண்டை போல் கொடியது -கொரோனா விழிப்புணர்வுப் பாடல்
அணுவை விட சிறியது, அணுகுண்டை போல் கொடியது கொரோனா விழிப்புணர்வுப் பாடலில் இணைந்த வைரமுத்து எஸ்.பி. பால சுப்பிரமணியம்
2. எனது கருத்தை பாமர மக்களுக்கும் கொண்டு சேர்த்தவர்களுக்கு நன்றி -ரஜினிகாந்த்
எனது கருத்தை பாமர மக்களுக்கும் கொண்டு சேர்த்த ஊடகங்களுக்கும்,பத்திரிகைகளுக்கும், சமூக வலைதளங்களுக்கும், மன்ற உறுப்பினர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி! என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்து உள்ளார்.
3. ரஜினி அரசியல் கட்சி தொடங்குவது அவருக்கும் தெரியாது, இறைவனுக்கும் தெரியாது - நடிகர் வடிவேலு
ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிப்பாரா என்பது அவருக்கும் தெரியாது நமக்கும் தெரியாது என்று நடிகர் வடிவேலு கிண்டலாக கூறியுள்ளார்.
4. கட்சிக்கு ஒரு தலைமை ஆட்சிக்கு ஒரு தலைமை என்பது தான் எனது அரசியல் நிலைப்பாடு- ரஜினிகாந்த்
கட்சிக்கு ஒரு தலைமை ஆட்சிக்கு ஒரு தலைமை என்பது தான் எனது அரசியல் நிலைப்பாடு என ரஜினிகாந்த் கூறினார்.
5. நடிகர் விஜயின் எனர்ஜியின் ரகசியம் என்ன? வியக்கும் ஹிர்த்திக் ரோஷன்
நடிகர் விஜயின் எனர்ஜியின் ரகசியம் என்ன என வியந்து உள்ளார் பாலிவுட் நடிகர் ஹிர்த்திக் ரோஷன்