துப்பறியும் படத்தில் அருண் விஜய்-அறிவழகன் மீண்டும் இணைகிறார்கள்
அருண் விஜய்யை வைத்து, ‘குற்றம் 23’ படத்தை இயக்கி வெற்றி கண்டவர், டைரக்டர் அறிவழகன். இவரும், அருண் விஜய்யும் மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைகிறார்கள்.
‘செக்கச்சிவந்த வானம்,’ ‘தடம்’ ஆகிய படங்களை அடுத்து அருண் விஜய் நடிக்கும் புதிய படம், இது. பயங்கர சண்டை காட்சி கள் நிறைந்த திகில் படமாக தயாராகிறது.
மிக பிரமாண் டமான முறையில் படம் தயாராகிறது. அறிவழ கன் இயக்கிய படங்களில் அதிக பொருட்செலவில் தயாராகும் படம், இதுதான். படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. இதுபற்றி டைரக்டர் அறிவழகன் கூறிய தாவது:-
‘‘தமிழ் திரையுலகில் இதுவரை வந்திராத புதுமையான துப்பறியும் படம், இது. சண்டை காட்சிகளும், திகிலான சம்பவங்களும், எதிர்பாராத திருப்பங்களும் நிறைந்த திரைக்கதை. கதாநாயகியாக ரெஜினா நடிக்க இருக்கிறார். ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய, சாம் சி.எஸ். இசையமைக் கிறார். விஜய ராகவேந்திரா தயாரிக்கிறார்.
படப்பிடிப்பு இம்மாதம் தொடங்கி, 2020-ம் ஆண்டு கோடை விடுமுறை கொண்டாட்டமாக இந்த படத்தை திரைக்கு கொண்டுவர திட்டமிட்டு இருக்கிறார்கள்.
Related Tags :
Next Story