சினிமா செய்திகள்

பட வாய்ப்பு குறைந்ததால்கவர்ச்சிக்கு மாறிய சிருஷ்டி + "||" + Switched to glamor actress srushti dange

பட வாய்ப்பு குறைந்ததால்கவர்ச்சிக்கு மாறிய சிருஷ்டி

பட வாய்ப்பு குறைந்ததால்கவர்ச்சிக்கு மாறிய சிருஷ்டி
பட வாய்ப்புகள் குறைந்ததால் நடிகை சிருஷ்டி டாங்கே கவர்ச்சிக்கு மாறி உள்ளார்.
சிருஷ்டி டாங்கே 2010-ல் ‘காதலாகி’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி தொடர்ந்து மிஷ்கின் இயக்கிய யுத்தம் செய் படத்தில் நடித்து பிரபலமானார். அதன்பிறகு மேகா, டார்லிங், எனக்குள் ஒருவன், கத்துக்குட்டி, வில் அம்பு, ஜித்தன்-2, தர்மதுரை, அச்சமின்றி, காலக்கூத்து என்று பல படங்களில் நடித்தும் ஒன்றிரண்டை தவிர மற்ற படங்கள் தோல்வியையே சந்தித்தன.

தற்போது சேரனின் ராஜாவுக்கு செக் என்ற ஒரு படம் மட்டுமே கைவசம் உள்ளது. சிரிக்கும்போது கன்னத்தில் விழும் குழியால் ரசிகர்களை கவர்ந்து வைத்திருந்த சிருஷ்டி டாங்கேவுக்கு பெரிய படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காதது வேதனையை ஏற்படுத்தியது.

குடும்பப் பாங்காக நடித்து வந்த சிருஷ்டி டாங்கே இந்த கவர்ச்சி போட்டியில் இல்லாததும் படங்கள் குறைய காரணம் என்று கூறப்பட்டது. இதனால் தற்போது கவர்ச்சிக்கு மாறி உள்ளார். ஆடை குறைப்பு செய்து கவர்ச்சியான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தி உள்ளார்.

இந்த படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. பட வாய்ப்புகள் குறையும் நடிகைகள் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இயக்குனர்களையும் தயாரிப்பாளர்களையும் கவரும் யுக்தியை சிருஷ்டி டாங்கேவும் கடைப்பிடிக்க தொடங்கி உள்ளார் என்கின்றனர். சிருஷ்டியின் கவர்ச்சி புகைப்படங்களை பார்த்த சிலர் சமூக வலைத்தளத்தில் அவரை ஆபாசமாக விமர்சித்து வருகிறார்கள்.