வெப் தொடரில் ஜெயலலிதா வாழ்க்கை - ‘குயின்’ என்ற பெயரில் ரிலீசானது


வெப் தொடரில் ஜெயலலிதா வாழ்க்கை - ‘குயின்’ என்ற பெயரில் ரிலீசானது
x
தினத்தந்தி 15 Dec 2019 11:48 PM GMT (Updated: 2019-12-16T05:18:36+05:30)

வெப் தொடரில் ஜெயலலிதாவின் வாழ்க்கை, ‘குயின்’ என்ற பெயரில் ரிலீசாகி வரவேற்பை பெற்றுள்ளது.


ஜெயலலிதா வாழ்க்கையை தலைவி, த அயன் லேடி என்ற பெயர்களில் திரைப்படங்களாக தயாராகின்றன. கங்கனா ரணாவத், நித்யா மேனன் ஆகியோர் ஜெயலலிதா வேடத்தில் நடிக்கின்றனர். அதோடு ‘குயின்’ என்ற பெயரில் வெப் தொடராகவும் கவுதம் மேனன், பிரசாத் முருகேசன் ஆகியோர் இயக்கி உள்ளனர்.

இதில் ஜெயலலிதா வேடத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ளார். இந்த வெப் தொடர் தற்போது இணையதளத்தில் ரிலீசாகி வரவேற்பை பெற்றுள்ளது. இந்தி நடிகை சிமி அகர்வால் ரம்யாகிருஷ்ணனை பேட்டி எடுப்பதுபோல் கதை தொடங்குகிறது. பிளாஷ்பேக்கில் சிறுவயதில் ஜெயலலிதா பள்ளியில் படித்த காட்சிகள், படிப்பின் மீது அவருக்கு இருந்த ஆர்வம், முதல் மாணவியாக தேர்ச்சி, வீட்டில் நிலவும் வறுமை என்று தொடர்கிறது.

தாய் நிர்ப்பந்தத்தால் விருப்பம் இல்லாமல் சினிமாவில் நடிப்பது, எம்.ஜி.ஆருடன் சந்திப்பு, சினிமாவில் நிகழ்த்திய சாதனைகள், அரசியல் பிரவேசம், எம்.ஜி.ஆர் மறைவு என்று அடுத்தடுத்த தொடர்களில் ஒரு திரைப்படத்தை பார்ப்பதுபோல் விறுவிறுப்பாகவும் பிரமாண்டமாகவும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

இதில் ரம்யா கிருஷ்ணன் கதாபாத்திரம் சக்தி சேஷாத்திரி என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. ஜெயலலிதாவின் தாய் கதாபாத்திரத்தில் சோனியா அகர்வால் வருகிறார். இளம் வயது ஜெயலலிதாவாக அஞ்சனா ஜெயபிரகாசும் எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்தில் இந்திரஜித் சுகுமாரனும் நடித்துள்ளனர்.

எஸ்.ஆர்.கதிரின் கேமரா அந்த காலத்தையும் இன்றைய காலத்தையும் வேறுபடுத்தி காட்டி உள்ளது. தர்புகா சிவாவின் பின்னணி இசையும் காட்சியோடு ஒன்ற வைக்கிறது. 13 தொடர்களையும் நேர்த்தியாக படமாக்கி உள்ளனர்.


Next Story