ஆசிய கவர்ச்சி பெண்கள் பட்டியலில் அனுஷ்கா


ஆசிய கவர்ச்சி பெண்கள் பட்டியலில் அனுஷ்கா
x
தினத்தந்தி 17 Dec 2019 11:40 PM GMT (Updated: 2019-12-18T05:10:44+05:30)

லண்டனை சேர்ந்த ஈகிள்ஸ் ஐ என்ற அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் ஆசியாவை சேர்ந்த கவர்ச்சியான ஆண்கள் மட்டும் பெண்கள் பட்டியலை தயார் செய்து வெளியிட்டு வருகிறது.

இந்த வருட கவர்ச்சி பெண்கள் பட்டியலில் முதல் இடத்தை இந்தி நடிகை அலியாபட் பிடித்துள்ளார்.

தீபிகா படுகோனே, பிரியங்கா சோப்ரா, கேத்ரினா கைப், ஹினாகான், சுர்பாப் சந்தானா, ஷிவாங்கி ஜோஷி, நியா ஷர்மா உள்ளிட்டோரும் முதல் 10 இடங்களில் உள்ளனர். இந்த பட்டியலில் அனுஷ்காவுக்கு 22-வது இடம் கிடைத்துள்ளது. இது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த தகவலை வலைத்தளத்தில் வைரலாக்கி வருகிறார்கள். அனுஷ்கா 2006-ல் ரெண்டு படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகையாக உயர்ந்தார். இவரது நடிப்பில் அருந்ததி, வேட்டைக்காரன், சிங்கம், வானம், தெய்வத்திருமகள், அலெக்ஸ் பாண்டியன், இரண்டாம் உலகம், லிங்கா, என்னை அறிந்தால் முக்கிய படங்களாக அமைந்தன.

பாகுபலி முதல் மற்றும் இரண்டாம் பாகங்களில் நடித்து மேலும் புகழ் உச்சிக்கு சென்றார். தற்போது மாதவனுடன் நிசப்தம் என்ற படத்தில் நடித்து வருகிறார். தென்னிந்திய பட உலகில் நம்பர்-1 இடத்தில் இருக்கும் நயன்தாரா இந்த பட்டியலில் இல்லை. இதுபோல் ஆசிய கவர்ச்சி ஆண்கள் பட்டியலில் இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன் முதல் இடத்தை பிடித்து இருக்கிறார்.

Next Story