நடிகை கடத்தல் வீடியோவை கேட்டு திலீப்புடன், கைதான மேலும் 3 பேர் மனு


நடிகை கடத்தல் வீடியோவை கேட்டு திலீப்புடன், கைதான மேலும் 3 பேர் மனு
x
தினத்தந்தி 18 Dec 2019 11:00 PM GMT (Updated: 2019-12-18T22:47:30+05:30)

கேரளாவில் 2017-ம் ஆண்டு பிரபல நடிகையை காரில் கடத்தி பாலியல் ரீதியாக துன்புறுத்தி வீடியோ எடுத்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நடிகை கடத்தலில் ஈடுபட்ட பல்சர் சுனில் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர். நடிகர் திலீப்புக்கும் இதில் தொடர்பு இருப்பதாகவும் கூலிப்படையை வைத்து கடத்தலில் அவர் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

இதையடுத்து திலீப்பை போலீசார் கைது செய்து கொச்சி ஆலுவா சிறையில் அடைத்தனர். 85 நாட்கள் சிறையில் இருந்த பின் நிபந்தனை ஜாமீனில் விடுதலை ஆனார். இந்த வழக்கு மீதான விசாரணை கொச்சி அங்கமாலி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. குற்றப்பத்திரிகையோடு நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்த வீடியோவையும் போலீசார் தாக்கல் செய்தனர்.

அந்த வீடியோவில் சில தவறுகள் இருப்பதாகாவும் எனவே வீடியோவை தனக்கு வழங்குமாறும் திலீப் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். சுப்ரீம் கோர்ட்டிலும் மனு செய்தார். சில காட்சிகளை மட்டும் பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. வீடியோவை வழங்கும்படி மீண்டும் மனுதாக்கல் செய்தார்.

இந்த நிலையில் நடிகை கடத்தல் வழக்கில் கைதான பல்சர் சுனில், மார்ட்டின், மணிகண்டன் ஆகியோரும் நடிகை கடத்தல் வீடியோவை பார்க்க தங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று கோரி எர்ணாகுளம் கோர்ட்டில் புதிய மனுதாக்கல் செய்துள்ளனர்.

Next Story