தமிழில் வரும் சல்மான்கான் படம்


தமிழில் வரும் சல்மான்கான் படம்
x
தினத்தந்தி 18 Dec 2019 11:15 PM GMT (Updated: 2019-12-18T22:56:25+05:30)

பிரபுதேவா இயக்கத்தில் தபாங்-3 இந்தி படத்தில் சல்மான்கான் நடித்துள்ளார். கதாநாயகியாக சோனாக்சி சின்ஹா மற்றும் சுதிப் உள்ளிட்ட மேலும் பலர் நடித்துள்ளனர்.

தபாங்-3  படம் தமிழிலும் அதே பெயரில் வெளியாகிறது. இதையடுத்து சல்மான்கான் சென்னையில் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

“தபாங் படத்தில் எல்லோருக்குமான பொதுவான கருத்துகள் உள்ளன. எனவேதான் தமிழிலும் இந்த படத்தை வெளியிடுகிறோம். நான் நடிகராவதற்கு முன்பே சென்னையுடன் எனக்கு தொடர்பு இருந்தது. முதல் முறையாக ஒரு விளம்பர படத்தில் நடிக்க இங்கு வந்துள்ளேன். மீனவர் பகுதியில் அந்த படத்தை படமாக்கினோம்.

இன்னொரு படத்தின் படப்பிடிப்புக்காகவும் இங்கு வந்து இருக்கிறேன். அப்போது ஒருமாதம் வரை இங்கு தங்கி இருந்தேன். சென்னையில் பல விருந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளேன். நிறைய உணவுகளையும் விரும்பி சாப்பிட்டு இருக்கிறேன். எனக்கு தமிழ் படங்கள் பிடிக்கும் விஜய்யின் போக்கிரி உள்ளிட்ட சில தமிழ் படங்கள் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டன.

நான் ரஜினிகாந்தின் ரசிகன். மும்பையில் அவர் நடித்த 2.0 படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்தபோது அவரை பார்ப்பதற்காக என்னை அழைக்காமலேயே அந்த விழாவுக்கு சென்றேன். அப்போது என்னை பார்த்து ரஜினி ஆச்சரியப்பட்டார்.”

இவ்வாறு சல்மான்கான் கூறினார்.


Next Story